காதலர் தினம் வரலாறு
*ராணுவ வீரர்கள் பற்றாக்குறை இருப்பினும் பல்வேறு போர்களில் ஈடுபட்டு வந்தது ரோம் நாடு.
*ராணுவ வீரர்களின் பற்றாக்குறைக்கு ரோம் நாட்டில் திருமணம் புரிந்த இளைஞர்கள் போருக்கு செல்ல வேண்டிய அவசியமில்லை என்று ஒரு சட்டம் இருந்ததே காரணமாகும்.
*இதனால் மன்னர் இரண்டாம் கிளாடிஸ் ரோம் நாட்டில் உள்ள இளைஞர்கள் யாருமே திருமணம் செய்து கொள்ள கூடாது என்று தடை விதித்து சட்டம் இயற்றினார்.
*அத்துடன் அனைத்து இளைஞர்களும் கட்டாயம் ரோம் ராணுவத்தில் சேர்ந்து பணிபுரிய வேண்டும் என்று கட்டளை பிறப்பித்தார்.
*கட்டாய திருமண தடை மற்றும் கட்டாய ராணுவ வேலை ஆகிய சட்ட திணிப்புகள் ரோம் மக்களுக்கு பிடிக்கவில்லை ஆனாலும் வலுவான மன்னருக்கு எதிராக செயல்பட முடியாத காரணத்தால் அமைதியாக இருந்தனர்.
*இதற்கிடையில் பாதிரியார் வாலண்டைன்ஸ் அவர்களுக்கு இச்சட்டங்கள் பிடிக்கவில்லை என்பதால் மன்னரை நேரடியாக எதிர்த்து பிரச்சாரம் செய்தார்.
*பாதிரியாரிடம் சமரசம் பேச மன்னர் முன் வராத காரணத்தால் ரோம் நாட்டில் காதலில் விழுந்த காதலர்களுக்கு ரகசியமாக திருமணம் செய்து வைக்க துணிந்தார்.
*இச்செய்தி காட்டுத்தீ போல பரவ ரோம் நாட்டில் உள்ள காதலர்கள் வாலண்டைன்ஸ் அவர்களிடம் அடைக்கலம் கேட்டு வருகை புரிந்தார்கள்.
*அடைக்கலம் தேடி வந்த அனைவருக்கும் ரகசிய திருமணம் செய்து வைத்தார் வாலண்டைன்ஸ்.
*வாலண்டைன்ஸ் செயலை கண்டு சினம் கொண்ட மன்னர் கி.பி 269 பிப்ரவரி 14 ஆம் தேதி வாலண்டைன்ஸ் பாதிரியாருக்கு மரண தண்டனை விதித்தார்.
*வாலண்டைன்ஸ் மரணித்த பிப்ரவரி 14 ஆம் நாள் வாலண்டைன்ஸ் தினமாக (காதலர் தினமாக) கொண்டாடப்பட்டு வருகிறது.
*19ஆம் நூற்றாண்டில் இருந்து தான் காதலர் தினம் ஆடம்பரமான விழாவாக அனைத்து மத ஒருங்கிணைப்பாக உருவெடுத்தது.
*காதலர் தினம் குறித்து மேலும் ஆய்வுக்குரிய பல்வேறு கோணங்கள் உள்ளது என்பதை கவனத்தில் கொள்ள வேண்டுகிறேன்.
விவரணைகள்
Valentines Day History - 1
Valentines Day History - 2
வாசித்தமைக்கு நன்றி.
வணக்கம்.
No comments:
Post a Comment