Chocks: டெடி பியர் வரலாறு

Saturday, March 6, 2021

டெடி பியர் வரலாறு

டெடி பியர் வரலாறு 
*டெடி என்பது அமெரிக்க ஜனாதிபதி தியோடர் ரூஸ்வெல்ட்டின் செல்லப்பெயராகும். 

*14 நவம்பர் 1902 அன்று மிசிசிப்பியின் ஒன்வர்ட் அருகே கரடி வேட்டை பயணத்திற்கு மிசிசிப்பி ஆளுநர் ஆண்ட்ரூ லாங்கினோ அமெரிக்க ஜனாதிபதி தியோடர் ரூஸ்வெல்ட்டை அழைத்திருந்தார்.

*குழுவில் உள்ள மற்ற வேட்டைக்காரர்களைப் போல தியோடர் ரூஸ்வெல்ட் ஒரு கரடியையும் கண்டுபிடித்து சுடவில்லை. 

*இதனால் தியோடர் ரூஸ்வெல்ட்டின் உதவியாளர்கள் ஹோல்ட் கோலியர் தலைமையில் ஒரு கருப்பு கரடியை வில்லோ மரத்தில் கட்டி அக்கரடியை சுடுமாறு தியோடர் ரூஸ்வெல்ட்டை பரிந்துரைத்தனர்.

*இது மிக திறமையற்ற செயல் என்று கருதி தியோடர் ரூஸ்வெல்ட் கரடியை சுட மறுத்துவிட்டார். 

*ஒரு கரடியை சுட மறுத்த ஜனாதிபதியின் கதை என்ற செய்தி நாடு முழுவதும் செய்தித்தாள் கட்டுரைகள் மூலம் விரைவாக பரவியது.

*அரசியல் கார்ட்டூனிஸ் கிளிபோர்ட் பெர்ரிமேன் கரடியைச் சுட மறுத்த ஜனாதிபதியை இலகுவாக நையாண்டி செய்ய முடிவு செய்தார். 

*16 நவம்பர் 1902 அன்று கிளிபோர்ட் பெர்ரிமேனின் கார்ட்டூன் வாஷிங்டன் போஸ்டில் வெளியானது.

*கார்ட்டூன் செய்தியின் பரபரப்பை பார்த்துவிட்டு ப்ரூக்ளின் சாக்லேட் கடை உரிமையாளர் மோரிஸ் மிட்சோம் தனது மனைவியுடன் இணைந்து அழகான கரடி பொம்மைகளை உருவாக்கி அதற்கு "டெடி பியர்" என பெயரிட்டு ஜனாதிபதிக்கு அர்ப்பணித்தார்.

*இப்பெயரைப் பயன்படுத்த தியோடர் ரூஸ்வெல்ட்டின் அனுமதியைப் பெற்ற பிறகு மோரிஸ் மிட்சோம் "ஐடியல் டாய்" நிறுவனத்தை நிறுவி கரடி பொம்மைகளை உருவாக்கினார். 

*இன்று உலகளவில் "டெடி பியர்" பொம்மை பிரபலமாக 14 நவம்பர் 1902 அன்று நடைபெற்ற தியோடர் ரூஸ்வெல்ட்டின் வேட்டை பயணமே அடிப்படை காரணமாகும்.
விவரணை 

Teddy Bear History


வாசித்தமைக்கு நன்றி.

வணக்கம்.

No comments:

Post a Comment

பேரறிஞர் அண்ணா - அறியாதவர்களுக்கு ஓர் அறிமுகம்

பேரறிஞர் அண்ணா - அறியாதவர்களுக்கு ஓர் அறிமுகம் - Will Be Updated Shortly -