Chocks: இயக்குனர் ஸ்ரீதர்

Monday, April 12, 2021

இயக்குனர் ஸ்ரீதர்

இயக்குனர் ஸ்ரீதர் 
# புகழ் பெற்ற திரைப்பட வசனகர்த்தாவான இளங்கோவன் வசனங்களால் ஈர்க்கப்பட்டு திரையுலகில் நுழைந்தார் ஸ்ரீதர்.

# 1950 களில் எதிர்பாராதது, மாமன் மகள், அமரதீபம், மாதர் குல மாணிக்கம், யார் பையன், எங்கள் வீட்டு மகாலட்சுமி, உத்தம புத்திரன், மஞ்சள் மகிமை போன்ற பல திரைப்படங்களுக்கு வசனகர்த்தாவாகப் பணி புரிந்தார் ஸ்ரீதர்.

# வசனகர்த்தாவான இளங்கோவனும் ஸ்ரீதரும் இணைந்து சித்தூர் ராணி பத்மினி (1963) திரைப்படத்திற்கு கதை-வசனம் எழுதினர்.

# ஜெமினி கணேசன் மற்றும் சரோஜாதேவியை உச்ச நட்சத்திரமாக நிலை நிறுத்திய கல்யாணபரிசு (1959) தான் ஸ்ரீதர் இயக்கிய முதல் திரைப்படம்.

# தமிழ் சினிமாவில் “கதை, திரைக்கதை, வசனம், இயக்கம், தயாரிப்பு” என்று ஒரு சேர முதன் முதலாக கல்யாணபரிசு திரைப்படம் மூலம் வேலை செய்தவர் ஸ்ரீதர்.

# முதன்முதலாக இந்தியா - பாகிஸ்தான் கதையை எடுக்க எண்ணி 1965 இந்தியா - பாகிஸ்தான் போர் குறித்து 1965 இல் சிவாஜி கணேசனை வைத்து ஒரு பிடி மண் (முதலில் இட்ட பெயர் நெஞ்சிருக்கும் வரை) படத்தை எடுக்க எண்ணினார் ஆனால் போர் விரைவாக முடிந்த காரணத்தால் அப்படத்தை எடுக்கும் எண்ணத்தை கைவிட்டு அதனை தொடராக பொம்மை இதழில் எழுதினார் ஸ்ரீதர்.

# கருப்பு வெள்ளை படங்களை விட்டுவிட்டு பலரும் Eastman Color படங்களை அதிகமாக எடுக்க முன்னுதாரமாக இருந்தவர் (எடுத்துக்காட்டாக ஸ்ரீதர் இயக்கிய ஈஸ்ட்மேன் கலர் படங்கள் காதலிக்க நேரமில்லை, வெண்ணிறாடை, ஊட்டி வரை உறவு, சிவந்த மண், உத்தரவின்றி உள்ளே வா, அவளுக்கென்று ஓர் மனம், உரிமை குரல்).

# எம்.ஜி.ஆர் - சிவாஜி மட்டுமே Eastman Color திரைப்படங்களில் நடித்து வந்த காலத்தில் பிற நடிகர்களை வைத்து Eastman Color படங்களை எடுத்து பெரும் வெற்றி கண்டவர்.

# எம்.ஜி.ஆர் முன் சிகெரெட் பிடித்த ஒரே இயக்குனரான ஸ்ரீதர் எம்.ஜி.ஆரை வைத்து உரிமைக்குரல் மற்றும் மீனவ நண்பன் ஆகிய இரண்டு வெற்றி திரைப்படங்களை எடுத்தார்.

# வெண்ணிறாடை படத்தில் ஹேமமாலினி நடிகையாக அறிமுகம் ஆக வேண்டியவர் ஆனால் மிகவும் ஒல்லியாக இருந்த காரணத்தால் அவரை படத்தில் இருந்து நீக்கிவிட்டு அந்த கதாபாத்திரத்தை நிர்மலாவுக்கு கொடுத்தார்.

# வெண்ணிறாடை திரைப்படம் மூலம் ஜெயலலிதாவின் தமிழ் சினிமா வாழ்வுக்கு அடித்தளமிட்டவர் ஸ்ரீதர் ஆனால் அதே ஜெயலலிதா பின்னாளில் ஸ்ரீதரை ஏளனம் செய்தது வரலாறு.

# பாடல் காட்சிகளை, நகைச்சுவை காட்சிகளை Trademark செய்யும் வகையில் இயக்குவதில் முன்னோடியாக திகழ்ந்தவர் ஸ்ரீதர் (எடுத்துக்காட்டு நவீன தமிழ் சினிமாவின் முதல் நகைச்சுவை Trademark காதலிக்க நேரமில்லை படத்தில் பாலையாவுக்கு நாகேஷ் கதை சொல்லும் காட்சியாகும்).

# தமிழில் நகைச்சுவை படங்களில் முதல் பத்து படங்கள் என்று பட்டியலிட்டால் அதில் ஸ்ரீதர், சித்ராலயா கோபு கதை எழுதி C.V.ராஜேந்திரன் இயக்கி சிவாஜி கணேசன் நடித்த கலாட்டா கல்யாணம் நிச்சயம் இடம் பெறும்.

# சிவாஜி கணேசனின் ஆஸ்தான இயக்குனர்களில் ஒருவரான C.V.ராஜேந்திரன் ஸ்ரீதரின் சகோதரர் (Cousin) ஆவார்.

# ஸ்ரீதரின் நெருங்கிய கூட்டாளியான பள்ளி நண்பர் சடகோபன் தான் பின்னாளில் சித்ராலயா கோபு ஆனார்.

# ஸ்ரீதரின் படங்களில் நகைச்சுவை பகுதிகளை பெரும்பாலும் மேற்பார்வை இட்டவர் சித்ராலயா கோபு தான்.

# சித்ராலயா கோபு இயக்கிய முதல் திரைப்படம் காசே தான் கடவுளடா.

# ரவிச்சந்திரன், ஸ்ரீகாந்த், வெண்ணிறாடை மூர்த்தி, காஞ்சனா, ஜெயலலிதா, நிர்மலா, கவிதா உட்பட பலரை தமிழ் திரையுலகில் அறிமுகம் செய்தவர் மற்றும் சரோஜா தேவி, தேவிகா, ராஜஸ்ரீ ஆகியோரின் திரைவாழ்வை ஸ்திரப்படுத்தியவர் இயக்குனர் ஸ்ரீதர்.

# பாடல்கள் திரைப்படத்தை வசனங்கள் திரைப்படமாக மாற்றியவர் கலைஞர் என்றால் நாயகர்கள் திரைப்படத்தை இயக்குனர்கள் திரைப்படமாக மாற்றியவர் ஸ்ரீதர் என்றால் மிகையல்ல.

# இந்தி திரைப்பட உலகில் வெளிவந்த “Screen” வார சினிமா இதழ் போல தமிழ் திரைப்பட உலகில் “சித்ராலயா” வார சினிமா இதழை வெளியிட்டு அக்கால மேற்குலக திரைப்படங்களை பற்றி நவீன விமர்சன பார்வையில் எழுதியவர் ஸ்ரீதர்.

# தமிழ் இயக்குனராக இருந்து இந்தி இயக்குனராகவும் தடம் பதித்தவர் ஸ்ரீதர்.

# முதன் முதலாக வெளிநாட்டில் படமாக்கப்பட்ட தமிழ் திரைப்படம் ஸ்ரீதர் இயக்கிய சிவந்த மண் ஆகும்.

# முதன் முதலாக காஷ்மீரில் படமாக்கப்பட்ட தமிழ் திரைப்படம் ஸ்ரீதர் இயக்கிய தேன் நிலவு.

# படங்களுக்கு பெயர் சூட்டுவதில் புதுமைகளை கையாண்டவர் ஸ்ரீதர். எடுத்துக்காட்டாக நெஞ்சில் ஓர் ஆலயம், நெஞ்சம் மறப்பதில்லை, சிவந்த மண், உரிமைக்குரல், உத்தரவின்றி உள்ளே வா, வெண்ணிறாடை, தேன் நிலவு.

# மத்திய தர வர்க்கத்தின் வாழ்க்கையை இயன்றவரை உயிரோட்டமாக பிரதிபலிக்கும் பாதைக்கு தமிழ் திரையுலகை இட்டு சென்றவர்.

# குடும்ப சிக்கல்களை, காதல் சிக்கல்களை, சமூக சிக்கல்களை திறம்பட இயக்கியவர்.

# பழமைவாதத்தை உடைத்தெறிந்து திரைப்படங்களில் காதல் காட்சிகளுக்கு புத்துணர்ச்சி ஊட்டி இயக்கியவர்.

# தமிழ் சினிமாவின் திருப்புமுனை இயக்குநர் என்று போற்றப்படும் ஸ்ரீதர் தான் நவீன தமிழ் சினிமாவில் முக்கோண காதல் கதைகளை திறம்பட வடிவமைத்தவர்.

# ஸ்ரீதர் தொடங்கி வைத்த புது பாதையில் தான் கே.பாலச்சந்தர், பாலு மகேந்திர, மகேந்திரன், பாரதிராஜா போன்றோர் பயணித்தனர்.

# திரையுலகில் புதுமுகங்களை அதிகளவில் அறிமுகம் செய்ய வேண்டும் என்ற எண்ணம் கொண்டவர் அப்பாணியிலே பின்னர் கே.பாலச்சந்தர், பாரதிராஜா பயணித்தனர்.

# இயக்குனர் ஸ்ரீதரிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்த P.மாதவன், C.V.ராஜேந்திரன், சித்ராலயா கோபு, P.வாசு, சந்தான பாரதி போன்றோர் பின்னாட்களில் புகழ் பெற்ற இயக்குனர் ஆனார்கள்.

# நவீன தமிழ் சினிமாவின் முன்னோடி ஸ்ரீதர் அவ்வகையில் பல பிரபல இயக்குனர்களுக்கும் முன்னோடி ஸ்ரீதர் தான்.

# ஊடகங்கள் நவீன தமிழ் சினிமாவை வடிவமைத்த ஸ்ரீதரை பேச மறந்துவிட்டது அல்லது மறுத்துவிட்டது.

பிறப்பு = 22 ஜூலை 1933 

இறப்பு = 20 அக்டோபர் 2008

விவரணைகள் 

ஸ்ரீதர் - 50 கலர் பாடல்கள் 


ஸ்ரீதர் பற்றிய தகவல்கள் - 1


ஸ்ரீதர் பற்றிய தகவல்கள் - 2


ரஜினிகாந்த் - ஸ்ரீதர் 


எம்.எஸ்.வி பற்றி ஸ்ரீதர்


மனோபாலா பார்வையில் 


கு.ஞானசம்பந்தன் பார்வையில் 


ஜெயலலிதா - ஸ்ரீதர் கருத்து வேறுபாடு 


வாசித்தமைக்கு நன்றி.

வணக்கம்.

No comments:

Post a Comment

பேரறிஞர் அண்ணா - அறியாதவர்களுக்கு ஓர் அறிமுகம்

பேரறிஞர் அண்ணா - அறியாதவர்களுக்கு ஓர் அறிமுகம் - Will Be Updated Shortly -