சுதந்திர தேவி சிலை
# 1860 களில் பிரெஞ்சு சிற்பி பிரடெரிக் அகஸ்டே பார்தோல்டி (Frederic Auguste Bartholdi) எகிப்தின் போர்ட் செய்டில் (Port Said) உள்ள சூயஸ் கால்வாயின் (Suez Canal) நுழைவாயிலில் ஆசியாவிற்கு ஒளியை தரக்கூடிய தீப்பந்தம் ஏந்திய அரேபிய விவசாய பெண்ணின் சிலையை (Egypt Carrying The Light To Asia) வடிவமைக்க விரும்பினார்.
# கிரேக்க சிலையான ரோடொஸின் கொலோசஸ் (Colossus of Rhodes) வடிவில் எகிப்திய சிலையை வடிவமைக்க விரும்பிய பிரடெரிக் அகஸ்டே பார்தோல்டியின் திட்டம் எகிப்திய நிதிநிலை சுமையால் கைவிடப்பட்டது.
# கைவிடப்பட்ட சிலை வடிவமைப்பை மறுசுழற்சி (Recycle Design) செய்து சுதந்திர தேவி சிலையாக (Statue of Liberty) 1886 இல் நியூயார்க் துறைமுகத்தில் நிறுவ வழிவகை செய்தார் பிரடெரிக் அகஸ்டே பார்தோல்டி.
# அமெரிக்கா - பிரான்ஸ் உறவை வலுப்படுத்த வேண்டுமென்ற நோக்கில் 1865 இல் பிரஞ்சு நீதிபதி எட்வர்ட் டி லாபூலே (Edouard De Laboulaye) ஆலோசனையின் பேரில் சுதந்திர தேவி சிலை உருவானது.
# 204.1 டன் எடை கொண்ட சிலையின் கட்டுமானம் 1875 இல் தொடங்கி 1884 இல் முழுமை அடைந்து பிரான்சில் இருந்து கப்பல் மூலம் அமெரிக்காவுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
# 1886 இல் நியூயார்க்கில் சுதந்திர தேவி சிலை அர்ப்பணிக்கப்பட்டு பின்னர் 1924 இல் இச்சிலை தேசிய நினைவுச்சின்னமாக அறிவிக்கப்பட்டது.
# சுதந்திர தேவி சிலையின் வலது கையில் தீப்பந்தம் ஏந்தியும் இடது கையில் அமெரிக்க விடுதலை நாளான 4 ஜூலை 1776 என எழுதப்பட்ட புத்தகமும் வடிவமைக்கப்பட்டு இருக்கிறது.
# மொத்தத்தில் அமெரிக்க புரட்சி போரில் பிரான்ஸ் மற்றும் அமெரிக்காவுக்கு இடையில் நிலவிய நட்பு கூட்டணிக்கு மரியாதை செலுத்தும் வகையிலும், ஜனநாயகத்தை கட்டியெழுப்பிய அமெரிக்காவின் வெற்றியைக் கொண்டாடவும், உலகில் சுதந்திர கொள்கைகளை ஊக்குவிக்கவும் அமெரிக்காவிற்கு சுதந்திர தேவி சிலையை பிரான்ஸ் அன்பளிப்பாக வழங்கியது.
விவரணைகள்
Liberty Statue - Facts
Liberty Statue - Arab Women
வாசித்தமைக்கு நன்றி.
வணக்கம்.
No comments:
Post a Comment