Chocks: அக்கால சினிமா துணுக்குகள்

Friday, November 12, 2021

அக்கால சினிமா துணுக்குகள்

அக்கால சினிமா துணுக்குகள்

தங்கப்பதக்கம் (1974)

தங்கப்பதக்கம் படம் தமிழ் சினிமாவில் காவல்துறை கதைகளுக்கு முன்னோடியாக அமையப்பெற்றது. மதுரை சென்ட்ரல் திரையரங்கில் அன்றைய மதுரை காவல்துறையினருக்கு சிறப்புக் காட்சி திரையிடப்பட்டது.
1974 இல் தங்கப்பதக்கம் படம் மாபெரும் வெற்றி பெற்றாலும் அதன் பின்னர் 1976 வரை சிவாஜி நடித்த படங்களுக்கு வெற்றி கிட்டவில்லை (அவன் தான் மனிதன், உத்தமன் போன்றவை விதிவிலக்கு). 1977 இல் இளையராஜா இசையில் முதன் முதலாக சிவாஜி நடித்த தீபம் படமே சிவாஜிக்கு செகண்ட் இன்னிங்ஸ்.

அந்தமான் காதலி (1978)

அந்தமான் காதலி படத்தில் யேசுதாஸ் மற்றும் வாணி ஜெயராம் பாடிய "நினைவாலே சிலை செய்து" பாடல் பிரபலமானது. அன்று இப்பாட்டில் "திருக்கோவிலே ஓடி வா" என்பதை "தெருக்கோவிலே ஓடி வா" என்று யேசுதாஸ் பாடியதாக சர்ச்சை ஏற்பட்டது.
இப்படத்தில் டி.எம்.எஸ் பாடிய "பணம் என்னடா பணம் பணம் குணம் தானடா நிரந்தரம்" பாடலும் பிரபலமானது. அண்ணே! அதெப்படி? பணம் தானே நாம் வாழ்வதற்கே ஆணிவேர் என கவியரசு உதவியாளர் வினவி உள்ளார். அதற்கு கவியரசு "ஏன்டா! நீ வேற நானே இந்த பாட்ட எழுத காசு வாங்கிட்டு தானே எழுதித் தரேன்! என்று கேலியாக பதில் அளித்துள்ளார்.

அன்பே வா (1966)

1966 இல் அன்பே வா படக்காட்சிகளும் செலவுகளும் அக்கால இயக்குனர் சங்கர் படம் போன்றது. எம்.ஜி.ஆரும் ஏ.வி.எம் நிறுவனமும் இணைந்த ஒரே திரைப்படமான அன்பே வா மூலம் வழக்கமான கதைகளில் இருந்து மாறுபட்டு வித்தியாசமான எம்.ஜி.ஆரை மக்கள் பார்த்து ரசித்தனர். அழுத்தமான கதையே இல்லாமலும் வழக்கமான எம்.ஜி.ஆர் படமாக இல்லாமலும் கூட அன்பே வா பிரம்மாண்டமாக வெற்றி பெற காரணம் பாடல் காட்சிகள், ரொமான்ஸ் காட்சிகள், சிம்லா காட்சிகள் போன்றவை தான். இப்படத்திற்கு பின்னர் பல்வேறு தமிழ் படங்கள் சிம்லாவில் எடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. ஷூட்டிங் நாட்களில் தங்கிய போது எம்.ஜி.ஆருக்கு குளிர் பிரதேசம் பிடித்துவிட பின்னர் அவரின் பல படங்களில் குளிர் பிரதேச காட்சிகள் இடம் பெற்றது குறிப்பிடத்தக்கது.
எம்.ஜி.ஆர் நன்றாக நடனம் ஆடுவார் என்பதை "நாடோடி போக வேண்டும் ஓடோடி" பாடலில் காணலாம். பிரபல எழுத்தாளர் சாவி "புதிய வானம்" பாடல் காட்சியில் நடந்து செல்வார். தமிழ் திரையுலகில் ஒரு படம் பெரிய அளவில் வெற்றி பெற்றால் அதை வைத்து சம்பளத்தை சிறிது உயர்த்தும் நடைமுறை இப்படம் மூலமே தொடங்கியது என்று கேள்வி.

இப்படத்தில் சரோஜா தேவிக்கு அம்மாவாக நடித்த டி.பி.முத்துலெட்சுமி நடிகரும் இயக்குனருமான டி.பி.கஜேந்திரனின் அண்ணி ஆவார். டி.பி.முத்துலெட்சுமி மற்றும் எம்.ஜி.ஆர் ஆகியோரை அறிமுகம் செய்தது இயக்குனர் எல்லீஸ் ஆர் டங்கன். இப்படத்தில் சரோஜா தேவிக்கு அப்பாவாக நடித்தவர் ராமச்சந்திரன். ஆரம்ப கால திரையுலகில் இவர் நடிகர் ராமச்சந்திரன் என்று அழைக்கப்பட்ட போது எம்.ஜி.ஆர் நடிகர் எம்.ஜி.ராமசந்தர் என்றே அழைக்கப்பட்டார். நாளடைவில் எம்.ஜி.ராமசந்தர் மக்கள் திலகம் எம்.ஜி.ஆராக பிற்காலத்தில் ராமச்சந்திரன் குணச்சித்திர நடிகரானார்.

இந்தியானா ஜோன்ஸ் I (1981)

இந்தியானா ஜோன்ஸ் முதல் பாகத்தில் எதிரி கத்தியை வைத்து கதகளி ஆட அதை வேடிக்கையாக பார்க்கும் ஹாரிசன் ஃபோர்டு சட்டென துப்பாக்கியை எடுத்து சுடுவார். 
இக்காட்சியை இருவருக்கும் இடையே கத்தி சண்டையாக எடுக்க ஸ்டீவன் ஸ்பீல்பெர்க் முதலில் திட்டமிட்டுள்ளார். ஆனால் இக்காட்சி படமாக்க வேண்டிய நாளன்று ஹாரிசன் ஃபோர்டு வயிற்றுப்போக்கால் அவதிப்பட்டுள்ளார். அதனால் உடல் சோர்வடைந்த ஹாரிசன் ஃபோர்டு ஸ்டீவன் ஸ்பீல்பெர்கிடம் இக்காட்சியை மாற்றிவிட்டு துப்பாக்கியை வைத்து சுடுவதாக மாற்றி கொள்ளலாமா? என்று கேட்டுள்ளார். கத்தி சண்டையாக எடுத்தால் சில நாளாகும் துப்பாக்கியால் சுடுவது வித்தியாசமான காட்சியாக அமையக்கூடும் மேலும் ஒரே நாளில் முடியும் என்றும் எண்ணி ஸ்டீவன் ஸ்பீல்பெர்க் மகிழ்ச்சியாக ஏற்றுக் கொண்டு விட்டார்.

கத்தியும் துப்பாக்கியும் 


T.R.ராமண்ணா

T.R.ராமண்ணா மூன்று மணம் புரிந்தவர். அதில் T.R.ராமண்ணாவுக்கும் சரோஜா பெயருக்கும் ஒரு ராசி உண்டு. ஜக்குபாய்யை மனைவி ஆக்கி நடிகைகள் B.S.சரோஜா மற்றும் E.V.சரோஜா ஆகியோரை துணைவி ஆக்கிக் கொண்டார் T.R.ராமண்ணா. E.V.சரோஜா நடனக் கலையை வழுவூர் ராமையா பிள்ளையிடம் தான் பயின்றார். நடனக்கலைஞர் வழுவூர் ராமையா பிள்ளையின் மகன் தான் பின்னணி பாடகர் மாணிக்க விநாயகம்.
இதற்கிடையே, B.சரோஜா தேவியை வைத்து T.R.ராமண்ணா முதலில் தெலுங்கு படம் பின்னர் தமிழில் பாசம் படம் இயக்கிய காலகட்டத்தில் தன் சகோதரரிடம் "டேய்! இந்த சரோஜாவையும் திருமணம் செய்துவிடாதே" என்று கேலியாக கேட்டுக் கொண்டார் T.R.ராமண்ணாவின் சகோதரி T.R.ராஜகுமாரி. இவர் தான் நவீன தமிழ் சினிமா உலகின் முதல் கனவுக்கன்னி என்று அழைக்கப்பட்டவர்.

வசன உச்சரிப்பு, இசைக்கோர்வை, காட்சியின்  சூழல், முகபாவனை என்று ஏதாவது ஒரு காரணத்தால் பிரபலமான திரைப்பட வசனங்களை பகிர்ந்து கொள்கிறேன்.

காதலிக்க நேரமில்லை (1964)
*ஒரு பொண்ணுள்ள கண்ணா?

*நீங்க சும்மா இருங்க பெரியவர் ரசிப்பார்!

*அசோக் அவங்கள வெளியில அனுப்பிச்சு கதவ சாத்து!

*யம்மா! இனிமே இந்த பய இருக்கும் போது எனக்கு சோத்த போடாத!

*போலீஸ் ஸ்டேசன் எங்கிருக்கு? எல்லாம் போற வழியில தான் இருக்கு!

அதே கண்கள் (1967)
*எனக்கு நல்லா நினைவிருக்கு!

*நீங்களே அந்த வாலிபனா இருந்தா?

*இப்படியும் அப்படியும் பேசி பார்ப்போமே!

*அந்த காட்சி என் மனக்கண்ல இருந்து மறையவே இல்ல!

*நானும் என்னுடைய லட்சியத்துல இருந்து விலக மாட்டேன்!

*கண்ண தொறங்க இன்னும் நல்லா தொறங்க அதே கண்கள்!

கெளரவம் (1973)
*இதெல்லாம் சாதாரண கேஸ் கட்டுகள் இல்லடி என் முன்னேற்ற பாதையின் படிக்கட்டுகள்!

*இவன் எப்படா கீழ விழுவான்னு தானே எல்லாரும் எதிர்ப்பாக்குறா? நடக்காதுடி!

*இந்த கேஸ்ல கண்ணன்ணா மிஸ்டர் ரஜினிகாந்தான்னு முடிவு செய்ற நேரம்!

*The young bull tries to kill the old bull!

தங்கப் பதக்கம் (1974)
*நம்ம தம்பி கத்தியால வயித்துல லேசா கிழிஞ்சாராம் குடல் வந்து வெளியில விழுந்துருச்சாம் இத போய் பெருசா எடுத்துக்கிட்டு!

*மத்தவங்கள என் பக்கம் திருப்பி தாம்பா பழக்கம் நான் மத்தவங்க பக்கம் திரும்பி பழக்கமில்ல!

*இன்ஸ்பெக்டர் ஜெகனை அரெஸ்ட் பண்ணுங்க!

*இங்கிலீஷ் தியாகி போல இருக்கு!

*I have a bad news for you!

*Good bye Mr.சௌத்ரி!

புதிய பறவை (1964)
*ஆப்ப தலையன்! பரோட்டா தலையன்!

*வயசு இளமையா இருந்தாலும் வார்த்த முதுமையா இருக்குது!

*எனக்கு நல்லா தெரியும் அந்த அடியினால அவ செத்திருக்க முடியாது!

*நல்லா இருக்குன்னு சொல்றாங்க பாருங்க அந்த வார்த்தையே ரசனையில் இருந்து தான் உற்பத்தி ஆகுது!

*குரல், உயரம் எல்லாம் ஒரே மாதிரி இருக்கலாம் ஆனா ரேகை? ரேகை? ஹான்? ரேகை ஒரே மாதிரி இருக்க முடியாது இருக்கவே முடியாது. குமார் உண்மையை சொல்லி இந்த பேய்கள இங்கேயிருந்து விரட்டு. சொல்லு! கோபால் ஐ எம் சாரி! ரெண்டும் ரேகையும் ஒரே மாதிரி இருக்கு. ஹான்? விளையாடுறியா? ரெண்டு ரேகையும் எப்படி ஒரே மாதிரி இருக்க முடியும்?

எங்க வீட்டுப் பிள்ளை (1965)
*உன்ன யாரோ தூக்கிட்டு போனாங்கன்னு சொன்னாலே? என்ன தூக்கிட்டு போறதா? எவனையாவது நான் தூக்கிட்டு வராம இருந்தா பத்தாது?

*இனிமே கெடுறதுக்கு இந்த உடம்புல என்ன இருக்கு?

*நான் கொஞ்சம் முரட்டுத்தனமாக தான் பழகுவேன்!

*நான் உனக்கு பிள்ளையா? நீ எனக்கு அப்பனா?

உலகம் சுற்றும் வாலிபன் (1973)

*என்ன இவனுங்க கால்லே உதச்சுகிறாங்க காலுக்கும் ஒரு கிளவுஸ் கொடுத்து இருக்கலாம் போல இருக்கு!

*உன் பலத்த நான் பார்த்துட்டேன் என் பலத்த நீ பாக்க வேண்டாம்? ஒரே ஒரு சான்ஸ் குடு?

*நாயோட திறமைய இவர் பாக்கட்டும் என்னோட திறமைய நீ பார்!

*A completely new method!

ஆயிரத்தில் ஒருவன் (1964)
*உங்கள் அதிகாரம் என்ன சிலப்பதிகாரமா? என்றென்றும் நிலைத்திருக்க?

*மதம் கொண்ட யானை என்ன செய்யும்? சினம் கொண்ட சிங்கத்திடம் சிதறி ஓடும்!

*நம் அடிமைகள் மிகமிக திறமைசாலிகள் ஆனால் வாய்தான் காது வரை இருக்கிறது!

அன்பே வா (1966)
*Lover's fight? Sorry!

*நாங்க ஒரு தின்னுக்கெட்ட குடும்பம்!

*காச வாங்குனாரு காசிக்கு போனாரு!

*நான் தான்யா கிருஷ்ணையா மச்சான் ராமையா!

*கோவிச்சுக்காதிங்க, நம்ம தொழில் நோட் அடிக்கிறதா?

*கிட்டத்தட்ட உங்கள எங்க முதலாளி மாதிரியே ஆக்கிட்டேன்!

*யார் யாரோ என்னென்னவோ நினைக்கிறாங்க நடக்குதா என்ன!

*சார் ஒரு பர்ஸ் வச்சு இருக்கார் பாரு என்ன கனம் எத்தன சலவ நோட்டு!

*பேய்க்கும் நோய்க்கும் ராத்திரிதான் கொண்டாட்டம்னு சொல்லுவாங்க!

*உலகத்துல நொண்டியா இருக்கலாம் ஆனா ஒண்டியா இருக்கக்கூடாது!

*மல்லிகை பூ இட்லி, மணக்கும் சாம்பார், பதமான தோசை ராமைய்யா ராமைய்யா ரட்சகனே!

*ஒரு வியாபாரியின் திறமைய தான் கவனிக்கணுமே தவிர அவன் விக்கிற பொருளப் பத்தி கவலப்படவே கூடாது!

*இது உங்க அப்பா போயிட்டதா அம்மா கொடுத்த தந்தி, இது உங்க அம்மா போயிட்டதா அப்பா கொடுத்த தந்தி!

*நான் வாழ்க்கையில் அடைந்த வெற்றிகள் எல்லாம் இந்த ஒரே தோல்வியில் அர்த்தமற்றதாகிப் போய் விட்டது!

வசந்த மாளிகை (1972)

*குடிகாரன்கூட வருத்தப்படுற அளவுக்கு பேசுறது தான் அவங்களுக்கு தெரிஞ்ச மரியாத இதையெல்லாம் சட்டபண்ணமா போறது தான் எனக்கு மரியாத!

*அனார்கலிக்கு சமாதி கட்டிய அக்பர் சாம்ராஜ்யம் என்னாச்சு? அம்பிகாபதிக்கு மரண தண்டனை கொடுத்த குலோத்துங்கனின் ஆட்சி எங்க போச்சு?

*லாபம் அடைய போறவங்க படிச்சு பார்க்க தேவையில்ல ஆனா நஷ்டம் அடையாம இருக்கணும்னா நிச்சயம் நீங்க இத படிச்சாகனும்!

*சரின்னா யாரா இருந்தாலும் விடக்கூடாது வேண்டானா விலைமாதா இருந்தாலும் தொடக்கூடாது!

*இது பாக பிரிவினையா? இல்ல பாக பிரிவினைங்கிற பேர்ல நடக்குற பயங்கர சதியா?

*அத தான் அவங்க பாசம்னு சொல்றாங்க நீ மோசம்னு நினைக்குறியா?

*பாசமா? அது எங்கம்மா இங்கருக்கு?
வாசித்தமைக்கு நன்றி.

வணக்கம்.

No comments:

Post a Comment

டேட்-லேபியங்கா கொலைகள்

டேட்-லேபியங்கா கொலைகள் பொருளடக்கம்  முகவுரை ஹெல்டர் ஸ்கெல்டர் டெர்ரி மெல்ச்சர் கொலைக்கான காரணங்கள்  முடிவுரை பின்குறிப்பு  விவரணைகள்  முகவுர...