Chocks: ம.பொ.சி தமிழ்த் தேசியத் தலைவரா?

Friday, February 9, 2024

ம.பொ.சி தமிழ்த் தேசியத் தலைவரா?

ம.பொ.சி தமிழ்த் தேசியத் தலைவரா?
நாம் தமிழர் கட்சியினர் தமிழ் தேசியத் தலைவராக ம.பொ.சி அவர்களை முன்மாதிரியாக குறிப்பிடுகின்றனர். உண்மையில் ம.பொ.சி யார்? செங்கோல், தமிழ் முரசு போன்ற இதழ்களிலும், எனது போராட்டம், தமிழும் சமஸ்கிருதமும், ஈழத்தமிழரும் நானும் போன்ற நூல்களிலும் ம.பொ.சி கூறிய சில குறிப்புகளை படித்தறிந்து முடிவு செய்து கொள்ளுங்கள்!

ஜனவரி 26 க்கு பிறகு ஊருக்கு ஊர் வட்டத்திற்கு வட்டம் இந்தி வகுப்புகள் நடைபெற்றால் வியப்படைவதற்கில்லை. இன்னும் ஒன்றிரண்டு ஆண்டுகளில் நடுத்தர பள்ளிகளில் இந்தி கற்பிக்கப்படலாம். 1975 இல் தமிழகம் இந்தி வழங்கும் பிரதேசமாகி விடும். இது தவிர்க்க முடியாதது. 

- செங்கோல் (27-12-1964)

இந்தியாவின் ஐக்கியத்தை ஏற்பவர்களாகிய நாம் இந்தியை அடியோடு புறக்கணிக்க முடியாது. தமிழக மக்கள் இந்தி பயில தான் வேண்டும். குறைந்தப்பட்ச தேர்வுக்குரிய மதிப்பெண் பெற வேண்டும் என்ற நிலையில் பாடத்தில் இந்தி இடம் பெற வேண்டும். 

- செங்கோல் (03-03-1963)

பஞ்சாங்கத்துக்கு மாற்றான தைத்திங்கள் முதல் நாள் ஆண்டு புத்தாண்டு தேவையில்லை. அரசின் வரவு செலவு திட்டத்தை இந்த சித்திரையிலே அரசு தொடங்கலாம். 60 ஆண்டு சுழற்சி முறையும் நன்றாக தான் உள்ளது. 

- செங்கோல் (18-04-1965)

தெய்வ பக்தியின் பெயரால் நம் முன்னோர் கடைப்பிடித்த அமாவாசை, கிருத்திகை, ஏகாதேசி, சஷ்டி விரதங்களை இன்றும் நாம் அனைவரும் சரியாக கடைப்பிடித்தால் உணவு பற்றாக்குறை தீர்த்து விடுமே. 

- செங்கோல் (07-11-1965)

பாரத ஒருமைப்பாடு காணவே தமிழில் இராமகாதை தந்தார் கம்பர். அயோத்தியில் பிறந்த ராமனும் மிதிலையில் பிறந்த சீதையும் நமக்கு அன்னியராவரோ? இல்லை உறவினரே! 

- செங்கோல் (14-04-1963)

ஒரு இந்துவாக மட்டுமில்லாமல் தேச பக்தியுடைய இந்தியனாகவும் பேசுகிறேன். நாம் இந்தியர், இந்தியா நம் தாய் நாடு என்பதை மறந்து விடக்கூடாது. 

- செங்கோல் (27-01-1963) 

அரசியல் சட்டத்தை திருத்தாதது தவறென்றால் தீயிட்டு எரிப்பது சரியோ? அண்ணாவின் படத்தை எரித்தால் சும்மா இருப்பாரா?

- செங்கோல் (02-02-1964)

நாம் தமிழர்களாக மட்டுமல்லாமல் இந்துக்களாவும் இந்தியர்களாவும் இருக்கிறோம் என்பதை மறந்து விடக்கூடாது. 

- செங்கோல் (24-10-1965)

இலங்கை தமிழர்களுக்கு தமிழ்நாட்டு தலைவர்கள் உதவியை வழங்குவது காலித்தனம். 

- செங்கோல் (23-02-1958) 

இந்தி ஒழிக என்று கூறுவது அறியாமை, அனாச்சாரம். 

- செங்கோல் (08-08-1963)

நாம் தமிழ் பிரிவினை கொள்கையின் எதிரிகள். 

- செங்கோல் (08-04-162)

இந்திய மொழிகளுக்கெல்லாம் தாய் மொழி சமஸ்கிருதமே என்று சொல்லப்படுகிறது தமிழிடத்து பற்றுடையவர்கள் இதனை மறுக்க தேவையில்லை. 

- தமிழும் சமஸ்கிருதமும் நூலில்

1951 இல் திராவிட இயக்க எதிர்ப்பு நடத்திய போது உடல் நிறை நானே வியக்கத்தக்க வகையில் கூடுதலானது. ஆம் 90 பவுண்டிலிருந்து 130 பவுண்டாக அதிகரித்தது. காரணம் திராவிட இயக்க எதிர்ப்பு காரணமாக என் இதயத்தில் ஏற்பட்டிருந்த எழுச்சி தான். 

- எனது போராட்டம் நூலில்

தனி ஈழ நாடு கோரும் பயங்கரவாதிகளின் முன் வரிசை தலைவர்களில் எவரையும் நான் சந்தித்ததில்லை. 

- ஈழத்தமிழரும் நானும் நூலில்

ஈழத்து வன்முறையாளர் பற்றி இந்தியா அதிகமாகத் தெரிந்து கொண்டது 1983இல் தான். அந்த ஆண்டில் இலங்கையின் வடபகுதியான யாழ்ப்பாணத்தில் சிங்கள இராணுவத்தார் பலரை (சுமார் 17 பேர் இருக்கலாம்) புலிப்படையினர் துப்பாக்கியால் சுட்டுக் கொன்றுவிட்டனர்.

- ஈழத்தமிழரும் நானும் நூலில்

"நீங்கள் விரும்பினால் பிரபாகரனை சந்திக்க ஏற்பாடு செய்கிறேன்" என்று முதல்வர் எம்.ஜி.ஆர் என்னிடம் கூறினார். ஆனால், அவரது புலிப்போக்கு எனக்கு பிடிக்காததால் அவரை நானாக சந்திக்க சென்று பார்ப்பதை தவிர்த்தேன். 

- ஈழத்தமிழரும் நானும் நூலில்

ஈழத்து வன்முறையாளர்கள் “டெர்ரரிஸ்டுகள்" என்ற பெயரை ஏற்கவில்லை. இப்படிச் சொல்லியதற்காக என் மீது எரிச்சல் காட்டியவர்களுமுண்டு. "புரட்சியாளர்" என்றே இவர்கள் தங்களைக் கருதிக் கொள்கின்றனர்.

- ஈழத்தமிழரும் நானும் நூலில்
விவரணைகள் 


வாசித்தமைக்கு நன்றி.

வணக்கம்.

No comments:

Post a Comment

பேரறிஞர் அண்ணா - அறியாதவர்களுக்கு ஓர் அறிமுகம்

பேரறிஞர் அண்ணா - அறியாதவர்களுக்கு ஓர் அறிமுகம் - Will Be Updated Shortly -