Chocks: ஜல்லிக்கட்டும் தி.மு.கவும்

Tuesday, January 20, 2026

ஜல்லிக்கட்டும் தி.மு.கவும்

ஜல்லிக்கட்டும் தி.மு.கவும்

குறிப்பு = இந்த இடுகை, கிடைக்கும் தகவல்களின் அடிப்படையில், ஒரு அடிப்படையான கண்ணோட்டத்தையே வழங்குகிறது. இது முழுமையான பகுப்பாய்வாக கருதப்படக் கூடாது. தலைப்பை முழுமையாகப் புரிந்துகொள்ள வாசகர்கள் மேலதிக ஆதாரங்களை ஆராயும்படி பரிந்துரைக்கப்படுகிறார்கள்.
பொருளடக்கம் 
  1. முகவுரை 
  2. காலவரிசை
  3. சுருக்கம் 
  4. விவரணைகள்
முகவுரை 

நகரமயமாக்கப்பட்ட உலகில், ஜல்லிக்கட்டு போன்ற விளையாட்டு போட்டிகள் குறித்து நம் அனைவருக்கும் ஒருமித்த கருத்து இருக்க வாய்ப்பில்லை. அதே நேரத்தில், தமிழர்களின் அடையாளத்துடன் ஜல்லிக்கட்டு ஆழமாகப் பிணைந்திருப்பதில் யாருக்கும் ஐயமில்லை. இத்தகைய பின்னணியில், 2014 ஆம் ஆண்டு மோடி ஆட்சிக்கு வந்த பிறகு, ஜல்லிக்கட்டைத் தடை செய்வது தொடர்பான பிரச்சினை தொடங்கியது. விலங்குகள் நல அமைப்பான பீட்டா மற்றும் நீதிமன்ற நடவடிக்கைகள் ஜல்லிக்கட்டைத் தடுக்க முக்கிய காரணமாக இருந்தன.

தமிழ்நாட்டில் பல்வேறு அரசியல் நடவடிக்கைகள் மூலம் ஜல்லிக்கட்டுத் தடைக்கு எதிராக உறுதியாக நின்றது தி.மு.க தான். 1965 ஆம் ஆண்டின் இந்தி எதிர்ப்புப் போராட்டம் ஆரம்பத்தில் தி.மு.கவால் வழிநடத்தப்பட்டாலும், இறுதியில் அது மாணவர்களின் தலைமையில் வேகம் பெற்றது. அதே போல, 2017 ஆம் ஆண்டு அலங்காநல்லூரில் மு.க.ஸ்டாலின் நடத்திய போராட்டமும் இறுதியில் மாணவர் இயக்கமாக மாறியது. இதன் பேரில், மு.க.ஸ்டாலினின் ஜல்லிக்கட்டு போராட்டத்தை ஜல்லிக்கட்டு பிரச்சினையில் ஒரு முக்கிய திருப்புமுனையாகப் பார்க்கலாம். அ.தி.மு.க அதிகாரப் பீடத்தைத் தேர்ந்தெடுக்க மும்முரமாக இருந்த போது, ஜல்லிக்கட்டுப் பிரச்சினையில் தி.மு.கவின் பங்களிப்பை சுருக்கமாகக் கூறுவதே இக்கட்டுரையின் முக்கிய நோக்கம்.

காலவரிசை

2015 செப்டம்பர் 25 = தி.மு.க இளைஞரணி தலைவர் மு.க.ஸ்டாலின், “நமக்கு நாமே” பயணத்தின் போது மதுரையில் உள்ள வாடிவாசலுக்கு சென்றார் மற்றும் ஜல்லிக்கட்டு மாடுபிடி வீரர்கள் கூட்டத்தில் பேசினார்.

2015 டிசம்பர் 28 = ஜல்லிக்கட்டு நடத்த கோரி, மு.க.ஸ்டாலின் தலைமையில் அலங்காநல்லூரில் போராட்டம் நடத்த தி.மு.க முடிவு செய்தது. ஆனால், ஒன்றிய பா.ஜ.க அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் ஜல்லிக்கட்டு நடத்தப்படும் என உறுதி அளித்ததனால் அந்தப் போராட்டம் கைவிடப்பட்டது. எனினும், அவர் அளித்த உறுதி பின்னர் நிறைவேற்றப்படவில்லை.

2017 ஜனவரி 03 = ஜல்லிக்கட்டு நடைபெற வேண்டும் என்ற கோரிக்கையுடன், அலங்காநல்லூரில் தி.மு.க சார்பில் எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் போராட்டம் நடைபெற்றது.

2017 ஜனவரி 13 = மாவட்டத் தலைநகரங்களில் தி.மு.க சார்பில் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன.

2017 ஜனவரி 20 = ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக தி.மு.க ரயில் மறியல் போராட்டம் நடத்தியது.

2017 ஜனவரி 08 - 23 = மாணவர்களின் தன்னெழுச்சியான ஜல்லிக்கட்டு போராட்டம் உலகளாவிய கவனத்தை ஈர்த்தது. இன்றைய தி.மு.க பொறுப்பாளர் கார்த்திகேய சிவசேனாபதி அன்றைய ஜல்லிக்கட்டு போராட்டத்தில் முக்கிய பங்கு வகித்தார்.  இதற்கிடையில் சில நடிகர்கள் மற்றும் தமிழ் தேசியவாதிகள் ஜல்லிக்கட்டு போராட்டத்தின் போக்கை மாற்ற முயன்ற நிலையில், போராட்டத்தின் இறுதி நாளில் அ.தி.மு.க. அரசு நடத்திய வன்முறையான தாக்குதல் குறிப்பிடத்தக்கது.

2017 ஜனவரி 23 = தி.மு.க உள்ளிட்ட அரசியல் கட்சிகளும், மாணவர் போராட்டங்களும் ஏற்படுத்திய அழுத்தத்தால், வேறு வழியின்றி மௌனம் கலைத்த அ.தி.மு.க அரசு, சட்டசபையின் சிறப்பு கூட்டத்தில் ஜல்லிக்கட்டுக்கான நிரந்தர சட்ட மசோதாவை நிறைவேற்றி, ஜனாதிபதியின் ஒப்புதலுக்காக அனுப்பி வைத்தது.

2017 ஜனவரி 31 =  சட்ட மசோதாவுக்கு ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி ஒப்புதல் அளித்த பின்னர், 2017 ஆம் ஆண்டு பல்வேறு இடங்களில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெற்றன.

2017 பிப்ரவரி 10 = தி.மு.க எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின், உலகப்புகழ் பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டிகளை நேரில் பார்வையிட்டார். அதே நேரத்தில், ஜல்லிக்கட்டு போட்டிகளை தொடங்கி வைக்க திட்டமிட்ட முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்திற்கு ஊர் மக்கள் எதிர்ப்பு தெரிவித்ததால், அவர் ஊருக்குள் வர முடியவில்லை.

2021 மே 07 =  ஜல்லிக்கட்டு காளைகளுக்கும், மாடுபிடி வீரர்களுக்கும் சிறப்பு சலுகைகள் வழங்கப்படும் என்று தேர்தல் அறிக்கையில் கூறிய தி.மு.க, 2021 சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியை பிடித்தது. தி.மு.க கூட்டணி சார்பில் மு.க.ஸ்டாலின் தமிழ்நாட்டின் முதலமைச்சராக பொறுப்பேற்றார்.

2022 ஜனவரி 21 = பாரம்பரிய விளையாட்டு மற்றும் பண்பாட்டை ஒருங்கிணைக்கும் வகையில் ஜல்லிக்கட்டு போட்டிகளை ஊக்குவிக்க, அலங்காநல்லூரில் பிரமாண்ட ஜல்லிக்கட்டு மைதானம் அமைக்கப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.

2023 மே 18 = தி.மு.க அரசின் வாதங்களை பரிசீலித்த உச்சநீதிமன்றம், தமிழ்நாட்டின் ஜல்லிக்கட்டு சட்டத்தின் செல்லுபடியை உறுதி செய்யும் வகையில் ஒரு முக்கிய தீர்ப்பை வழங்கியது.

2024 ஜனவரி 24 = ஜல்லிக்கட்டு போட்டிகளை பார்வையிடும் வகையில் "கலைஞர் நூற்றாண்டு ஏறு தழுவுதல் அரங்கம்" என்ற பிரமாண்ட அரங்கம் திறக்கப்பட்டது.

2026 ஜனவரி 17 = முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டிகளை நேரில் தொடங்கி வைத்து நிகழ்ச்சிகளை பார்வையிட்டதோடு, ஜல்லிக்கட்டில் சிறந்த மாடுபிடி வீரர்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் அரசு வேலை வழங்கப்படும் என்றும், அலங்காநல்லூரில் ரூ.2 கோடி மதிப்பில் ஜல்லிக்கட்டு காளைகளுக்கான சிறந்த பயிற்சி மற்றும் உயர்தர சிகிச்சை மையம் அமைக்கப்படும் என்றும் அறிவித்தார்.
சுருக்கம் 

2017 ஜனவரி 03 அன்று அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக மு.க.ஸ்டாலின் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து, மாணவ சமூகத்தின் எழுச்சிமிக்க போராட்டம் நடைபெற்றது. தி.மு.க. மற்றும் மாணவர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரின் தொடர்ச்சியான போராட்டங்களின் விளைவாக, ஜல்லிக்கட்டு போட்டிகள் மீண்டும் உறுதியாக நடைபெற வழி ஏற்பட்டது என்றால் அது மிகையல்ல.

விவரணைகள்

2015 = DMK will protest if Jallikattu isn’t held this Pongal


2015 = DMK to hold fast to demand lifting of ban on Jallikattu


2015 = DMK postpones fast over Jallikattu


2017 = DMK holds stir urging Union to allow Jallikattu


2017 = DMK cadres stage protest for Jallikattu


2017 = DMK holds rail protest for Jallikattu


2017 = Protests force CM OPS to leave without inaugurating Jallikattu


2017 = Tamil Nadu Jallikattu law gets President nod


2017 = M.K.Stalin attends the Alanganallur Jallikattu Event


2022 = Madurai's Alanganallur to get new Jallikattu Arena


2023 = Supreme Court Upholds Jallikattu in Tamil Nadu


2024 = CM M.K.Stalin Opens Kalaignar Centenary Jallikattu Arena


2026 = CM M.K.Stalin inaugurates Alanganallur Jallikattu


வாசித்தமைக்கு நன்றி.

வணக்கம்.

No comments:

Post a Comment

தமிழ்நாட்டின் மொழி உரிமைப் புரட்சி

தமிழ்நாட்டின் மொழி உரிமைப் புரட்சி குறிப்பு  =   இந்த இடுகை, கிடைக்கும் தகவல்களின் அடிப்படையில், ஒரு அடிப்படையான கண்ணோட்டத்தையே வழங்குகிறது....