Chocks: February 2024

Friday, February 16, 2024

பேரறிஞர் அண்ணாவின் கருத்து - அறியாதவர்களுக்கு ஓர் அறிமுகம்

பேரறிஞர் அண்ணாவின் கருத்து - அறியாதவர்களுக்கு ஓர் அறிமுகம்
Anna about being a Dravidian! 👇

I claim Sir, to come from a country, a part in India now, but which I think is of a different stock, not necessarily antagonistic. I belong to the Dravidian stock. I am proud to call myself a Dravidian. That does not mean that I am against a Bengali or a Maharashtrian or a Gujarati. As Robert Burns has stated, “A man is a man for all that”. I say that I belong to the Dravidian stock and that is only because I consider that the Dravidians have got something concrete, something distinct, something different to offer to the nation at large. Therefore it is that we want self-determination.

அண்ணா பார்வையில் தமிழன்! 👇

தமிழன் யாருக்கும் தாழாமல், யாரையும் தாழ்த்தாமல், யாரையும் சுரண்டாமல், யாராலும் சுரண்டப்படாமல் நல்வாழ்வு வாழ வேண்டும்.

தி.மு.கவின் நோக்கம் பற்றி அண்ணா!  👇

1.சாதி ஒழிப்பு.
2.ஜனநாயக சோசலிசம்.
3.மாநிலங்களுக்கு முழுமையான சுயாட்சி.
4.பயனுள்ள கூட்டாட்சியாக மாறும்படி அரசியலமைப்பின் மறுவடிவமைப்பு.
5.வகுப்புவாத சிறுபான்மைகளின் பிரச்சனைகளை தீர்க்க விகிதாச்சார பிரதிநிதித்துவம்.

இந்தியை பற்றி அண்ணா! 👇

ஒரு வடநாட்டு பெரியவர் என்னிடத்திலே மிகுந்து, என்னை பாராட்டிவிட்டு சொன்னார், நீங்கள் முயற்சி செய்தால், மூன்றே மாதத்தில் இந்தியை படித்துவிடலாம், என்றார். நான் ஒப்புக் கொண்டேன்! ஆமாம், அய்யா, மூன்றே மாதத்தில் படித்து விடலாம்? என்றேன். இல்லை, அதற்கு மேலே படிப்பதற்கு, அந்த மொழியில என்ன இருக்கிறது? ஆனால், நம்முடைய தமிழ் மொழி அப்படி சொல்வதற்கு இல்லை. முப்பது ஆண்டுகள் படித்தவர்கள் கூட, இன்னும் விளக்கம் இந்த இடத்தில், பொருள் சரியாக விளங்கவில்லை, என்று இன்றைய தரம் கூட புலவர்கள் கஷ்டப்படுகிறார்கள், நம்மை போன்ற சாதாரண மக்கள் அல்ல. அப்படிப்பட்ட மொழி, நம்முடையது.

போப்பிடம் அண்ணா முன் வைத்த கோரிக்கை! 👇

தமிழ்நாட்டின் முதலமைச்சராக இருந்த அண்ணா, அமெரிக்கா சென்ற போது போப் ஆண்டவரை சந்தித்தார். போப், "என்னிடம் எதாவது கேளுங்கள்," என்றார். அதற்கு அண்ணா, "எங்கள் நாட்டின் விடுதலை வீரர் மோகன் ரானடேவை விடுவிக்க, போர்ச்சுக்கல் அரசிடம் நீங்கள் பேச வேண்டும்," என்றார். போப் புன்னகைத்து, "நம்பிக்கையுடன் சென்றுவாருங்கள்," என்றார். இதற்குப் பிறகு, போர்ச்சுக்கல் விரைவில் மோகன் ரானடேவை விடுவிக்கிறார்கள். விடுதலையான மோகன் ரானடே முதலில் அண்ணாவை சந்திக்க விரும்பினார், ஆனால் அப்போது அண்ணா மறைந்திருந்தார். சென்னை வந்த மோகன் ரானடே, அண்ணா சமாதியில் கதறியழுதார்.

கோவா விடுதலைக்குப் போராடிய மோகன் ரானடே, போர்ச்சுக்கீசிய அரசால் தனிமைச் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். 1961 இல் கோவா இந்தியாவின் ஒரு பகுதியாக மாறினாலும், மோகன் ரானடே 1968 இல் தான் சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டார். தனக்காக எதுவும் கேட்காமல், ஒரு போராளியை விடுதலை செய்யுமாறு அண்ணா போப்பிடம் கேட்டது தான் "உரிமைக்குரல்" எனப்படும்.

அண்ணா தான் தமிழ்நாட்டை ஆள்கிறார்! 👇

ஒரு ஆண்டுக்கு முன்னாள் நான் பதவியில் வந்தேன். இந்த ஓராண்டில் நான் மூன்று முக்கியமான காரியங்களை செய்திருக்கிறேன்:

1.சுயமரியாதை திருமணத்திற்கு சட்ட அங்கீகாரம்.
2.தாய் திருநாட்டுக்கு 'தமிழ்நாடு' என்று பெயர் மாற்றம்.
3.தமிழ்நாட்டில் இந்திக்கு இடம் இல்லை என்று இருமொழி கொள்கை அறிவிப்பு.

இதை பார்த்து விட்டு பலருக்கும் கோவமும் ஆத்திரமும் வருகிறது, இவர்களை விட்டு வைக்கலாமா? ஆட்சியை கலைக்க வேண்டும் என நினைக்கிறார்கள். முடியுமா என்று சவால் விட மாட்டேன், உங்களால் முடியும். ஆனால் கலைத்து விட்டு வேறொருவர் வந்து அமர்ந்து அண்ணாதுரை கொண்டு வந்த இவற்றை எல்லாம் மாற்ற வேண்டும் என்று கருதினாலே, உடனே மக்கள் வெகுண்டெழுவார்கள் என்ற அச்சமும் கூடவே வரும். அந்த அச்சம் உள்ளவரை அண்ணாதுரை தான் இந்த நாட்டை ஆள்கிறான் என்று பொருள். அந்த அச்சம் எவ்வளவு காலத்திற்கு இருக்கிறதோ, அவ்வளவு காலத்திற்கு யார் இருந்தாலும் இல்லாவிட்டாலும் அண்ணாதுரை தான் இந்த நாட்டை ஆள்வதாக பொருள்.

கல்விச்செல்வம் பற்றி அண்ணா! 👇

கல்விச்செல்வம் காலத்தால் அழியாதது. அந்தச் செல்வம் நாட்டிலே - பாறைக்கடியிலே - சுரங்கத்திலிருக்கும் தங்கக் கட்டிகளாக இருக்கக் கூடாது. அதை எடுத்து பயன்படுத்திப் பளபளப்புள்ள - நல்ல ஒளியுள்ள தங்கமாக ஆக்க வேண்டும்.

ஆயுத பூஜை, சரஸ்வதி பூஜை பற்றி அண்ணா! 👇

கூற்று 1 = நூற்றுக்கு நூறு பேர் என்ற அளவில் படித்துள்ள மேனாட்டிலே சரஸ்வதி பூசை இல்லை! ஓலைக்குடிசையும் கலப்பையும் ஏரும் மண்வெட்டியும் அரிவாளும் இரட்டை வண்டியும் மண் குடமும் உனக்குத் தெரிந்த கண்டுபிடிப்புகள். தீக்குச்சிப் பெட்டிகூட நீ செய்ததில்லை. கற்பூரம் கூட, நீ செய்ததில்லை. கடவுட் படங்களுக்கு அலங்காரத்துக்குப் போடும் கண்ணாடி கூட, சரஸ்வதி பூஜை அறியாதவன் கொடுத்ததுதான். நீ, கொண்டாடுகிறாய். சரஸ்வதி பூசை, ஆயுத பூசை! ஏனப்பா? கொஞ்சம் யோசிக்கக் கூடாதா? மேனாட்டான், கண்டுபிடித்துத் தந்த அச்சு யந்திரத்தின் உதவி கொண்டு, உன் பஞ்சாங்கத்தை அச்சடித்துப் படித்து, அகமகிழ்கிறாயே! ஒரு கணமாவது யோசித்தாயா, இவ்வளவு பூசைகள் செய்து வந்த, நாம், நமது மக்கள், இதுவரை, என்ன, புதிய அதிசயப் பொருளைப் பயனுள்ள பொருளைக் கண்டுபிடித்தோம், உலகுக்குத் தந்தோம் என்று யோசித்துப் பாரப்பா! கோபப்படாதே! உண்மை, அப்படித்தான், கொஞ்சம் நெஞ்சை உறுத்தும். மிரளாமல், யோசி - உன்னையுமறியாமல் நீயே சிரிப்பாய். உன், பழைய நாட்களில் இருந்த பேரறிஞர்கள் தங்கள் புண்ய நூற்களை எல்லாம்கூட, ஓலைச்சுவடியிலேதானே எழுதினார்கள். அந்தப் பரம்பரையில் வந்த நீ, அவர்கள் மறைந்து, ஆங்கிலேயன் வருவதற்கு இடையே இருந்த காலத்திலே அச்சுயந்திரமாவது கண்டுபிடித்திருக்கக் கூடாதா? இல்லையே! எல்லாம் மேனாட்டான், கண்டுபிடித்துக் கொடுத்த பிறகு, அவைகளை, உபயோகப்படுத்திக் கொண்டு, பழைய பெருமையை மட்டும் பேசுகிறாயே, சரியா? யோசித்துப் பார்!

கூற்று 2 = மனிதனின் கற்பனைக்கே எட்டாதிருந்த, மனிதனின் உழைப்பைக் குறைக்கும் முறைகள், கருவிகள், பொருள்கள் ஆகியவைகளைக் கண்டுபிடித்தவர்கள் எல்லாம், இன்னமும் கண்டுபிடிக்கும் வேலையிலே உடுபட்டுக் கொண்டிருப்பவர்கள் எல்லாம், சரஸ்வதி பூஜை ஆயுத பூஜை கொண்டாடாதவர்கள்!

மனுதர்மம் பற்றி அண்ணா! 👇

கூற்று 1 = மனுதர்மம் - பிராமணிய ஏற்பாடு. இது கண்ணுக்குத் தெரியாத உருக்கிரும்புக் கோட்டை. கடவுள், தலைவிதி, மோட்ச நரகம், முன்ஜென்மப் பின்ஜென்மம் என்ற வன்மை மிக்கக் காவலாளிகளால் காக்கப்படுவது! எனவே தான், இதனை உடைத்தெறிந்து, புது நிலையை நாட்டில் தோற்றுவிப்பது என்பது, நினைத்ததும் நடந்து விடக்கூடிய இலகுவான காரியமாக இருக்கவில்லை. இதன் தாக்குதல் வெளியிலிருந்து வருவது அல்ல; உடன்பிறந்தே கொல்லும் வியாதியைப் போன்றது. களத்திலே கலங்காத வீரனும், வர்ணாஸ்ரமத்தின் வாடை வீசின விநாடியிலேயே கைகால் நடுக்குறுகிறான்?

கூற்று 2 = இன்னும் சாதி இருக்கிறது. சாதிப் பிரிவினையும் வேறுபாடுகளும் இன்னும் நீங்கவில்லை. சனாதனம் என்ற இந்த நோய் இன்னும் உள்ளது. விஷயங்கள் மாறவில்லை என்பதை இது காட்டுகிறது. சனாதன நோயை மருத்துவரால் குணப்படுத்த முடியாது. அப்படியானால் நோயை யார் குணப்படுத்த முடியும்? இளம் மாணவர்களால் மட்டுமே முடியும்.

கூற்று 3 = ஆபத்தான நேரத்தில் அடங்கியது போல் பாசாங்கு செய்யும். ஆனால் சனாதனச் சோமரசம் பருகியதும் மீண்டும் தலைகால் தெரியாது வர்ணாசிரம ஆட்டம் ஆடும். இது பார்ப்பனியத்தின் இயல்பு. இந்த இயல்பை யாராலும் மாற்ற முடியாது.

கூற்று 4 = பகுத்தறிவு என்ற ஒரே மருந்து தான் சனாதன நோயை குணப்படுத்தும், வேறு எந்த மருந்தும் அதை குணப்படுத்தாது.

விநாயகர் பற்றி அண்ணா! 👇

விநாயகர், பிள்ளையார், என்று பல பெயர்களால் அழைக்கப்பட்டுப் பூஜிக்கப்படும், கணபதி தமிழ்நாட்டுக்குரிய தெய்வமல்ல, பழந்தமிழர்கள் அவ்விதமான ஒரு கடவுளை, வணங்கினதில்லை, மிக மிகப் பிற்காலத்திலே வடநாட்டிலிருந்து இங்கு வந்து புகுந்த வழக்கம்.

ஒன்றே குலம் ஒருவனே தேவன் பற்றி அண்ணா! 👇

முப்பத்து முக்கோடி தேவர்கள் என்ற கோட்பாட்டை மாற்றி, சைவ மதத்தை போற்றி ஒன்றே குலம் ஒருவனே தேவன் என்று கூறியவர் திருமூலர். இந்த கோட்பாட்டை பகடி செய்து, வேலைக்காரி நாடகத்தில் பாத்திரப் பேச்சாக உருவாக்கியவர் அண்ணா. நாளடைவில், அண்ணாவின் கோட்பாடு ஒன்றே குலம் ஒருவனே தேவன் என்று திரிக்கப்பட்டது. ஒன்றே குலம் ஒருவனே தேவன் பற்றி அண்ணாவின் பார்வையில், ⏬

“ஒன்றே குலமும் ஒருவனே தேவனும்” என்றால், புற்றீசல் போன்ற பல குலங்களும் பல கடவுளரும் இருப்பானேன்? ஒரு கடவுளே பல பெயர்களால் வணங்கப்படுகிறார் என்றால், ஒரு கடவுள் இன்னொரு கடவுளோடு “நான் பெரியவன் நீ சிறியவன்” என்று சண்டையிட்டுக் கொள்வானேன்? ஒரு குலத்தவன் இன்னொரு குலத்தவனை “நான் உயர்ந்தவன் நீ தாழ்ந்தவன்” என்று கூறிக் குலப்போர் நடத்தி குடுமி விளைப்பானேன்?

ஓர் அரசன், தனக்குக் கீழே பல சிற்றரசர்களை வைத்து தன்னாட்டை ஆளுவதுபோல, ஒரு முழு முதற்பெருங் கடவுளும், தமக்கு கீழே பல சிறுசிறு கடவுளரை வைத்து இவ்வுலகத்தை இயக்குகின்றதா? அங்ஙனமாயின், அக்கடவுளுக்கு முழு முதற்றன்மையும்; எல்லாம் வல்ல இயல்பும், உண்டென்று கற்பிப்பதன் பொருள் என்ன? இந்து மதத்தில் பேசப்படும் கடவுளுக்கு, இச்சொல்லப்பட்ட தன்மைகள் உண்மையாகவே இருக்குமானால் இந் நாவல தீவில் பல்வேறு மதங்களும், அவற்றிற்குரிய பல்வேறு கடவுளரும் இருக்கக் காரணமில்லையே.

விருப்பு வெறுப்பற்ற ஒரு கடவுள், தன்னைப் பிறர் வணங்க வேண்டுமென்று விரும்புமா? தன்னை வணங்கியவர்களுக்குப் பிறப்பும் வணங்காதவர்களுக்கு பிறவாமையும் கொடுக்குமா? அப்படித்தானென்றால், கைக்கூலி பெற்றுக்கொண்டு ஒரு காரியத்தை முடித்துக் கொடுப்பவனுக்கும் அந்த கடவுளுக்கும் உள்ள வேறுபாடு என்ன? என்று இதுவரை கூறிய சுருக்கமான இவ்வுண்மைகளை உள்ளபடியே அறிவோடு ஆராய்ந்து பார்ப்பவர்க்கு, கடவுளின் தன்மை இப்படிப்பட்டது என்பதும், கடவுள் இல்லாமலேயே உலகில் வாழ முடியுமா? முடியாதா என்பதும், திராவிட மக்களுக்குக் கடவுள் கொள்கை எப்படி யாரால் – எந்த காலத்தில் உண்டானதென்பதும் எளிதில் விளங்குவதோடு, இயஞ்சும் உலகம் இயற்கையோடு அமைந்துள்ளது என்ற உண்மையும் விளங்கும் என்ற காரணத்தால், இன்னும் இதுபற்றி விரித்து எழுதாமல் இந்த அளவோடு முடிக்கிறேன்.

ஒன்றிய அரசின் வரி விதிப்பு பற்றி அண்ணா! 👇

இந்த அரசாங்கம், மக்கள் மீது இவ்வளவு வரி விதித்த பிறகும், சரியான வருமானத்தையோ, சரியான கணக்கையோ நாட்டுக்கு வழங்கவில்லை என்று சொல்கிறேன். எனவே, அதைத் தடுக்க எனக்கு அதிகாரம் இல்லை என்பதை உணர்ந்தாலும், நடத்தப்படும் இந்த திறமையற்ற, யதார்த்தமற்ற, பதிலளிக்காத மற்றும் ஜனநாயகமற்ற அரசாங்கத்திற்கு பெரும் தொகையை ஒதுக்கிய குற்றத்தை என்னால் தடுக்க முடியாது. 

விமர்சனங்கள் இருந்த போதிலும், அவர்களின் நிலைப்பாட்டை ஆதரிக்க அவர்களிடம் எண்கள் உள்ளது. எனவே, நாங்கள் எங்கள் கவலைகளை வெளிப்படுத்தும் அதே வேளையில், இறுதி அதிகாரம் கொண்ட பொதுமக்களிடம் இருந்து நீதியைப் பெற வேண்டும் என்று நாங்கள் நம்புகிறோம். நியாயமான தீர்ப்பு கிடைக்கும் என்ற நம்பிக்கை எங்களுக்கு உள்ளது.  

இந்தியா நாட்டை பற்றி அண்ணா! 👇

கூற்று 1 = இப்படியும் ஒரு நாடா? ஊரார் உழைப்பைத் தின்று கொழுத்துக் கொண்டு, முக்திக்கு வழிகாட்டுவதாகக் கூறிக்கொண்டு, ஒரு பட்டாளமே இருக்கிறதே. எந்த நாட்டிலாவது இப்படி ஒரு பயனற்ற கூட்டத்தை அனுமதிப்பார்களா?

கூற்று 2 இந்தியா ஒரு நாடு அல்ல. இந்தியா பல்வேறு இனக்குழுக்களைக் கொண்டுள்ளது, இந்தியா பல்வேறு மொழிக் குழுக்களைக் கொண்டுள்ளது மற்றும் இந்தியா ஒரு துணைக் கண்டம் என்று மிகச் சரியாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

கூற்று 3 மாகாணங்களுக்குத் தரப்படும் அதிகாரத்தின் தன்மை, அளவு, நிதியின் அளவு, வகை, ஆகியவற்றைக் கவனிக்கும்போது, ஒரு பெரிய ஜில்லா போர்டு போன்ற நிலையே, மாகாணங்களுக்குத் தரப்பட்டிருப்பது விளங்கும். 

கூற்று 4 சுயநிர்ணய அதிகாரம் வேண்டுமென்பதே திராவிட மக்களின் கோரிக்கை! திராவிடர்களை விருப்பத்திற்கு மாறாக அடிமையாகவும், இழிந்த குலத்தவனாகவும் “இந்து” என்ற தரித்திரப் பெயர் சூட்டி இறுகப்பிணைத்து ஆரியத்தின் காலடியில் வாழச் செய்வது பலாத்காரமல்லாது வேறென்ன?

கூற்று 5 = முதலாளித்துவமும் தேசியமும் ஒன்றாக இணைந்திருக்கிறது. இத்துடன் மதமும் இணைந்து கிடக்கிறது. இந்த முக்கூட்டு பயங்கர விளைவுகளுக்கு ஏற்றதானதால்தான் இதனை அழிக்க உண்மையான விடுதலை உணர்ச்சி உள்ளவர்கள் துடிக்கிறார்கள்.

திராவிட நாடு கோரிக்கை பற்றி அண்ணா! 👇 

திராவிட நாடு கோரிக்கை என்பது வேறுவிதமானது. பாகிஸ்தான், சீக்கிஸ்தான் போன்றதல்ல. ஏனெனில், பாகி்ஸ்தான் ஒரு புது படைப்பு. சீக்கிஸ்தான் ஒரு புதுக் கோரிக்கை. திராவிடஸ்தான் என்பது தனியாக இருந்த நாடு, இருக்கும் நாடு. நாங்கள் கோரும் திராவிடநாடு பூகோள நீதியிலும் சரித்திர ரீதியிலும் எப்போதும் தனியாகவே இருந்ததாகும். வட இந்தியாவைப் போன்றதல்ல. பெரிய பெரிய சாம்ராஜ்யங்கள் வடக்கே இருந்திருக்கின்றன. சந்திரகுப்தன், அக்பர், அவுரங்கசீப் போன்றோருடைய சாம்ராஜ்யங்கள் வடக்கில் இருந்திருக்கின்றன. அப்போதும் நாங்கள் கூறும் திராவிட நாடு, தென்னாடு - தனியாகத் தனி அரசுடனே இருந்ததாகும். பிரிட்டிஷார் இந்தியாவுக்கு வந்து, இந்திய நாட்டைத் தங்கள் வசப்படுத்திய பின்னரே இந்தியா உருவாயிற்று. நிர்வாக வசதிக்காகத் தென்னாடும் இணைக்கப்பட்டு டெல்லி ஆட்சி ஏற்பட்டது.அதற்கு முன்னதாகத் தென்னாடு - தக்காணம் - ஒரு சுதந்திர நாடாகத்தான் இருந்தது.

எல்லா அதிகாரங்களும் எம்மிடமே இருக்க வேண்டும் என்பது தான் தனி நாடு கோருவதன் நோக்கம் ஆகும். இப்போது எதற்கெடுத்தாலும் டெல்லிக்குப் போக வேண்டி இருக்கிறது. அந்நிலை இல்லாமல், எங்களது வர்த்தகத்தை நாங்களே நடத்த உரிமை இருக்க வேண்டும். இது போன்ற எங்களது விவகாரங்களில் இன்னொருவர் தலையீடு இருக்கக் கூடாது எல்லாம் எங்களாலேயே கவனித்துக் கொள்ளப்படவேண்டும்.

தோழர் லெனின் பற்றி அண்ணா! 👇

உலகில் ஒப்பற்ற மாறுதலைக் காட்டி, ஜாரின் வேட்டைக் காட்டினை மக்களின் பூந்தோட்டமாக்கிய, மாபெரும் புரட்சி வீரன் லெனின் பாட்டாளி உலகின் தலைவன், அவர் வரலாற்றுச் சுருக்கம், மே முழக்கம் மேதினியெங்கும் கிளம்பிய இக்கிழமை, ஒவ்வொருவர் நெஞ்சிலும் பதிய வேண்டும்; படித்தோர் புதியதோர் சக்தி பெறுவர்; கோழைகளும் வீரராகும் விதமானது அவருடைய வாழ்வு. அவர் சித்தரித்த சோவியத் நாட்டுக்குச் சொல்லொணாக் கஷ்டம் ஏற்பட்டுள்ள இந்நாளிலே லெனின் வரலாறு, படித்திடல் அவசியம். எத்தகைய வீரனின் சித்திரத்தை இன்று நாஜி வெறியன் நாசமாக்க நினைக்கிறான் என்பதை உணர்ந்து, தோள்தட்டி, எழுந்து போரிடத் தக்க புத்துணர்ச்சி தரும் புரட்சிப் பானம், அவர் வரலாறு.

அவரிடம் ரஷ்யர் கொண்ட அன்பு அளவற்றதென்பது, கோடிக்கணக்கான மக்கள் அவருக்குக் காட்டிய கடைசிக் கல்லறை மரியாதையிலிருந்து புலப்படுகின்றது. மாஸ்கோ காட்சிச் சாலையின் இன்றைக்கும் அவருடைய உடல் அழிந்துபோகா வண்ணம் காப்பாற்றி மயக்கப்பட்டிருக்கின்றது. தாய் நாடு மட்டுமன்று, ஜனசமுகத்திற்கே தம்முடைய தத்துவங்களைப் பறைசாற்றி ஏழைகளுக்குத் தன் ஆவியையே அர்ப்பணம் செய்த லெனினை எவரும், என்றைக்கும் மறக்க முடியாது. இராஜீய சுதந்திரம் மட்டுமல்லாது பொருளாதார சுதந்திரத்தின் அவசியத்தை உலகிற்கெடுத்துக் காண்பித்த லெனின் அழியாப்புகழ் பெற்றுவிட்டார்.

மே தினம் பற்றி அண்ணா! 👇

துப்பாக்கிக்கும் ஈட்டிக்கும், தடியடிக்கும் மார்பு காட்டியே, மேதின விழாவின் காரணகர்த்தர்கள்; மேதினியில், இந்நாள் தோன்றிடச் செய்தனர். 16, 12, 10 மணி நேரங்கள் செக்கு மாடுகள் போல் உழைத்து அலுத்த தோழர்கள், நாளொன்றுக்கு 8 மணி நேரமே வேலை செய்வோம் என்று உறுதியுடன் கூறினர். 1880ஆம் ஆண்டு மே மாதம் முதல் தேதி, இச் சூள் உரைத்த, அமெரிக்கத் தொழிலாளர் கூட்டம் கிளர்ச்சி நடத்திற்று. கிளர்ச்சியை அடக்கக் கடுமையான தண்டனைகள் தரப்பட்டன. கஷ்ட நஷ்டம் அதிகம். ஆனால், தோழர்கள் துளியும் அஞ்சாது கிளர்ச்சியில் உறுதியுடன் நின்றனர். வென்றனர், அவர்கள் அன்று சிந்திய இரத்தத்தை ஆண்டுதோறும் மே தின விழாவில், பாட்டாளி மக்கள் தமது நினைவினில் இருத்துவர். அதனால் உண்டாகும் உணர்ச்சியே கவைகளை உண்மைக் காட்சி களாக்கும். இவ்வாண்டு மே விழாவில் ஸ்டாலின் பேசுகையிலே இதுபோது உலகுக்கும், சோவியத் நாட்டுக்கும் ஏற்பட்டுள்ள இடுக்கணைத் தீர்க்கத் தீரமாகப் போரிட வேண்டும் என்பதனை வலியுறுத்திச் செஞ்சேனையின் வீரத்தையும் தியாகத்தையும் பாராட்டியதுபோல, மேதின விழாவன்று, பொதுவான இலட்சியத்தை பற்றி அறிந்து கொள்வதுடன், திராவிடத் திருநாட்டினைக் கெடுத்துவரும் ஆரியத்தை அழிப்போம், என சூள் உரைத்து சோர்வின்றி உழைக்கத் திராவிடத் தோழர்கள் முன் வேண்டுகிறோம். ஏனெனில், ஆரியம் அழிந்தாலன்றி இங்கு அபேதவாதம் ஏற்படாது. புகுத்தப்படினும் நிலைக்காது. எனவே மே தின விழா முழக்கமாகத் திராவிடர் தோழர்கள்,

ஆரியம் அழிக
அபேதவாதம் வாழ்க
சனாதனம் வீழ்க
சமதர்மம் வாழ்க

என்ற சூளுரைகளைக் கொள்ள வேண்டுகிறோம்.

விவரணைகள் 



வாசித்தமைக்கு நன்றி.

வணக்கம்.

Thursday, February 15, 2024

ஒருவன் பிறந்த கதை

ஒருவன் பிறந்த கதை

ஒரு ஊரில் ஒரு தம்பதிக்கு ஒரு பெண் குழந்தை பிறந்தது. சில ஆண்டுகளுக்கு பிறகு, மனைவி மீண்டும் கர்ப்பமானார். அதோடு சில வாரங்களில் மனைவியின் உடல் வலியும் வேதனையும் அதிகரித்தது. கணவர் என்ன செய்வார்? மனைவியை மருத்துவமனையில் சேர்த்தார்.

மருத்துவமனையில் சேர்த்த நாள் முதல் மருத்துவர் குளுக்கோஸ் பாட்டில் பாட்டிலாக ஏற்றிக்கொண்டு இருக்கிறார்கள். அறையில் பல காலி குளுக்கோஸ் பாட்டில்கள் அடுக்கி வைக்கப்பட்டுள்ளன. அந்த அறையில் மனைவி தனக்கு கஷ்டமாக இருப்பதாகவும், கருவை கலைத்துவிட்டு பிறகு பார்த்துக் கொள்ளலாம் என்றும் பேசிக் கொண்டிருந்தாள்.

கருக்கலைப்பு குறித்து மருத்துவரிடம் கருத்து கேட்ட போது, ​​"இரண்டு நாட்கள் காத்திருங்கள், என்ன செய்யலாம் என்று பார்க்கலாம்" என்று மருத்துவர் கூறினார். ஒரு நாள் மருத்துவ அறையை சுத்தம் செய்ய வந்த பணிப்பெண் அவர்களின் உரையாடலை கேட்டு "ஏம்மா! உனக்கு எத்தனை குழந்தைகள்?" என்று கேட்டாள்.

"எனக்கு ஒரு மகள் இருக்கிறாள்" மனைவி பதிலளித்தார். "அப்போது அதிக வலி இருந்ததா?" என்று பணிப்பெண் அடுத்த கேள்வியை கேட்டாள். அதற்கு மனைவி, “தாங்கிக்கொள்ள கூடிய அளவில் தான் வலி இருந்தது” என்று பதிலளித்தாள்.

அதை கேட்டுவிட்டு, "கொஞ்சம் வலியை தாங்குமா, ரெண்டாவது குழந்தைக்கு அதிக வலியில் துடித்தால் அது ஆண் குழந்தையாக இருக்க வாய்ப்புள்ளது. ஏனென்றால் எனக்கு அப்படித் தான் இருந்தது. ஒரு பெண் - ஒரு ஆண் என்று இரண்டு குழந்தைகள் என்று சொல்ல நல்லாத்தானே இருக்கு?" என்றாள் பணிப்பெண்.

மருத்துவரும் பணிப்பெண்ணும் கூறியதையடுத்து உடல் வலியை மனைவி பொறுமையாக தாங்கி கொண்டார். சுமார் ஒரு வார சிகிச்சைக்கு பிறகு, ஓரளவு குணமடைந்த மனைவியை கணவர் வீட்டுக்கு அழைத்து சென்றுவிட்டார். சில மாதங்கள் கழித்து அவர்களுக்கு ஒரு ஆண் குழந்தை பிறந்தது. பலரின் பொறுமை அந்த குழந்தை பிறக்க வழி செய்தது. பிறகு, அந்த குழந்தையே நான் தான் என்பதில் மகிழ்வுடன் தெரிவித்து கொள்கிறேன்.
வாசித்தமைக்கு நன்றி.

வணக்கம்.

ஒரு காலத்தில் மதுரை

ஒரு காலத்தில் மதுரை
முகவுரை 

ஒரு காலத்தில் தமிழ்நாட்டில் மதுரை தான் Textile & Chemical Industry Hub. 1892 இல் தொடங்கப்பட்ட ஹார்வி மில் என்ற மதுரா மில் என்ற மதுரா கோட்ஸ் தமிழ்நாட்டின் மிகப்பெரிய மில்லாக இருந்தது. அக்கால ஹார்வி மில் தொழிற்சங்க போராட்டங்கள் இடதுசாரிய தொழிலாளர் போராட்டங்களுக்கு முன்மாதிரியாக அமைந்தது.

1688 இல் Corporation ஆக்கப்பட்ட சென்னைக்கு பிறகு 1971 இல் அன்றைய முதல்வர் கலைஞரால் மதுரை இரண்டாவது Corporation ஆக்கப்பட்டது. 1981 இல் எம்.ஜி.ஆரால் கோவை மூன்றாவது Corporation ஆக்கப்பட்டது. 1990 கள் வரை தமிழ்நாட்டின் இரண்டாவது மிகப்பெரிய நகரமாக இருந்த மதுரை பின்னர் என்ன ஆனது? ஏன் வளர்ச்சி மங்கி போனது?

எம்.ஜி.ஆர் ஆட்சியில்

1980 கள் முதல் எம்.ஜி.ஆர் ஆட்சியில் தொண்டர்கள் போர்வையில் குண்டர்களின் தலையீடு மதுரையில் அதிகமானது. குண்டர்கள் அரசியலில் வளர வேண்டி கந்துவட்டி தொழில் உருவானது. தமிழ்நாட்டில் காவல் நிலையத்தில் "கரை வேட்டி" நுழைய ஆரம்பித்தது எம்.ஜி.ஆரின் ஆட்சியில் தான். அதன் தொடக்கப் புள்ளியாக அமைந்த ஊர் தான் மதுரை.

எம்.ஜி.ஆர் ஆட்சியில் 1980 கள் தொடங்கி "பழக்கடைக்காரர், தேங்காய்க்காரர், டீக்கடைக்காரர்" என்று பற்பல தொண்டர்கள் மதுரையில் மூவேந்தர்கள் சாதி அரசியலை வளர்த்தெடுத்தனர். குண்டர்களுக்கு Local Politics செய்ய சாதி அரசியல் மிகப்பெரிய அளவில் கைக்கொடுத்தது.

ஜெயலலிதா ஆட்சியில்

1980 களில் எம்.ஜி.ஆர் ஆட்சியில்  சாதி அரசியலுக்கு குண்டர்கள் கோடு போட்டனர். 1990 களில் ஜெயலலிதா ஆட்சியில் சசிகலாவின் கணவர் நடராஜன் ரோடு போட்டார். அதாவது மூன்று சாதிகளை ஒன்றாக்கி முக்குலத்தோர் என்ற மூவேந்தர் குலமாக்கி குரு பூஜை Concept ஒன்றை அரசியலாக்கி சாதி அரசியலின் வீரியத்தை அதிகரித்தார்.

1977 முதல் 1996 (1989-1991 தவிர) வரை கிட்டத்தட்ட 17 வருடங்கள் தமிழ்நாட்டை அ.தி.மு.க தான் ஆண்டது. அதில் மதுரையை Rogue City ஆக மாற்றினர். சுயசாதி பெருமை படிப்படியாக வளர்த்தெடுக்கப்பட்டது. அதற்கு சினிமாவும் கைக்கொடுத்தது.

சினிமாவின் தாக்கம் 

மதுரையில் புத்தி மங்கிய சுயசாதி பெருமை பேசும் கூட்டம் தேவர் மகன் திரைப்படத்தில் வரும் "புள்ளக்குட்டிய படிக்க வைங்கடா" என்ற வசனத்தை மறந்து "போற்றி பாடடி" பாடலை வெறிக் கொண்டு ரசிக்க தொடங்கினர். சேர சோழ பாண்டிய வம்சமே முக்குலத்தோர் வம்சம் என்று கதைத்து மகிழ்ந்தனர்.

Liberalism காலகட்டம் 

1990 களில் பிரதமர் நரசிம்ம ராவ், நிதியமைச்சர் மன்மோகன் சிங், வர்த்தகத்துறை அமைச்சர் ப.சிதம்பரம் ஆகியோர் முன்னெடுத்த Liberalisation, Privatisation and Globalisation (LPG) கொள்கை வேகமெடுத்த நேரத்தில் இங்கு முதல்வர் ஜெயலலிதா அந்த பொன்னான வாய்பை பயன்படுத்தி தமிழ்நாட்டிற்கு உரிய வளர்ச்சியை உறுதி செய்ய செயல்படவில்லை.

1991 இல் ராஜீவ் காந்தி கொல்லப்படாமல் இருந்திருந்தால், அதனால் அனுதாப அலையில் ஜெயலலிதா ஆட்சிக்கு வராமல் இருந்திருந்தால், இங்கு கலைஞரே முதல்வர் ஆகியிருப்பார். LPG அறிமுகமான நேரத்தில் தமிழ்நாட்டின் முதல்வராக கலைஞர் Urban & Semi-Urban ஊர்களை சம நோக்கில் வளர்த்தெடுக்க முயன்றிருப்பார் என்று கருத இடமுண்டு.

தென் மாவட்ட தி.மு.க

தென் மாவட்ட தி.மு.க.வில் தா.கி, பி.டி.ஆர், அழகிரி, பொன்.முத்து, மூர்த்தி என்று பற்பல முகங்கள் உண்டு. கழகத்தின் தூணாக விளங்கிய தா.கி, பண்பாளராக விளங்கிய பி.டி.ஆர், தொண்டர்களின் தலைவராக விளங்கிய  அழகிரி (அதனால் பாதிக்கப்பட்டது அவரே), அன்றைய களப்பணியாளராக விளங்கிய  பொன்.முத்து, இன்றைய களப்பணியாளராக விளங்கும் மூர்த்தி.

முடிவுரை 

தலைநகர் சென்னைக்கு அடுத்த நிலையில் மதுரை இருந்திருக்க வேண்டியது. ஆனால் 2000 களுக்கு பிறகு கொஞ்சம் கொஞ்சமாக கோவை அந்த இடத்தை பெற்று கொண்டது. அதற்கு கோவை மக்களின் அணுமுறை தான் காரணம். அங்கும் சாதி சச்சரவு நிலவுகிறது ஆனால் வளர்ச்சி என்று வரும் போது "கோவைக்காரன் கெட்டிக்காரன்" என்றால் மிகையல்ல.

வரலாற்று ரீதியாக புகழ் பெற்ற Ancient City, 1980 கள் முதல் சுயசாதி பெருமை பேச தொடங்கி, இன்றைய நவீன வளர்ச்சி தரவரிசையில் பின்தங்கியுள்ளது. சாதிய பிடிமானத்தால் புத்தி மங்கி வீழ்ந்த நகரமான மதுரையை ஓர் இரவில் மாற்ற முடியாது ஆனால் மதுரை மெல்ல மெல்ல மாற தான் வேண்டும். இப்போது இருக்கின்ற மதுரையே சிறப்பு என்று புறந்தள்ள முடியாது. கிராம மகிழ்ச்சி, நாட்டுக்கோழி குழம்பு, ஜல்லிக்கட்டு நிகழ்ச்சி, சாதிக்கொரு நீதி என்று இருக்கும் மதுரை மாற தான் வேண்டும்.

துணுக்கு செய்தி 

மதுரை மக்கள்தொகையில் சவுராஷ்டிரா தான் அதிகம். ஆனால், அவர்களின் அரசியல் இருப்பு நாடாளுமன்ற அரசியல் வட்டத்துடன் ஒப்பிடும் போது உள்ளூர் அரசியலில் குறைவாக உள்ளது. எடுத்துக்காட்டாக, Parliament வட்டதில் N.M.R.சுப்புராமன், A.G.சுப்புராமன், A.G.S.ராம் பாபு. Local வட்டதில் S.K.பாலகிருஷ்ணன் (மேயர்), S.R.ராதா (MLA).

வாசித்தமைக்கு நன்றி. 

வணக்கம்.

Monday, February 12, 2024

இன்று ஒரு தகவல்

இன்று ஒரு தகவல்
இன்று ஒரு தகவல் - 1

பிரதமர் வாஜ்பாய் வற்புறுத்திய போதிலும் ஜனாதிபதி K.R.நாராயணன் சாவர்க்கருக்கு பாரத ரத்னா வழங்குவதை தடுத்தார். அவருக்கு பின் பிரதமர் வாஜ்பாய் ஆதரவில், ஜனாதிபதியான A.P.J.அப்துல் கலாம், காங்கிரஸ் உட்பட எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்பை புறக்கணித்து, 2003 இல் இந்திய நாடாளுமன்றத்தில் மகாத்மா காந்தியின் உருவப்படத்திற்கு எதிரே நாடாளுமன்றத்தில் சாவர்க்கர் உருவப்படத்தைத் திறந்து வைத்தார்.

விவரணை 

President Ignores Opposition, Unveils Savarkar Portrait


இன்று ஒரு தகவல் - 2

13 ஆம் நூற்றாண்டில், ஆசியாவிற்கு பயணம் செய்த இத்தாலிய வணிகர் மார்கோ போலோ, தனது "மார்கோ போலோவின் பயணங்கள்" புத்தகத்தில் ஆசியாவின் செல்வமான மிளகு (Spices) பற்றி குறிப்பிட்டார். இந்த வெளிப்பாடு, இலாபகரமான மிளகு வர்த்தகத்தில் ஈடுபடுவதற்காக, ஆசியாவிற்கு, குறிப்பாக இந்தியாவிற்கு நேரடி கடல் வழிகளை நாட ஐரோப்பியர்களுக்கு உந்து காரணிகளில் ஒன்றாக இருந்தது.

விவரணை 

History of Spices


இன்று ஒரு தகவல் - 3

*ATM பயன்பாட்டை கண்டுபிடித்தவர்  John Shepherd Barron (Indian born Scottish Inventor).

*1967  இல் உலகில் முதன்முதலாக ATM பயன்பாட்டை அறிமுகம் செய்த வங்கி Barclays, லண்டன். 

*1987  இல் இந்தியாவில் முதன்முதலாக ATM பயன்பாட்டை அறிமுகம் செய்த வங்கி HSBC, மும்பை.

ஆறு இலக்கங்கள் கொண்ட ATM குறியீட்டை (PIN) வடிவமைத்து தனது மனைவியிடம் பரிசோதனை செய்தார் John Shepherd Barron. பரிசோதனையில் தனது மனைவி எளிதாக நினைவில் வைத்திருக்கும் எண்களின் நீளம் நான்கு என்பதைக் கண்டறிந்தார். இதன் விளைவாக, நான்கு இலக்க குறியீடு தேர்ந்தெடுக்கப்பட்டு, அதுவே உலகத் தரமாக (Standard) மாறியது.

விவரணை 

History of ATM PIN


இன்று ஒரு தகவல் - 4

புளிய மரத்தின் (Tamarind Tree) கடினத்தன்மை காரணமாக, இது கறிக் கடைகளில் வெட்ட பயன்படும் மரக்கட்டையாக பயன்படுத்தப்படுகிறது.

இன்று ஒரு தகவல் - 5

இரண்டாம் உலகப்போர் நடந்த காலகட்டம் 1939-1945. அப்போது, பர்மா, மலேசியா, இந்தியா, இலங்கை போன்ற நாடுகள் பிரிட்டிஷாரின் காலனி நாடுகளாக இருந்தது. பிரிட்டிஷாரின் உணவு உள்ளிட்ட போர்க்கால தேவைகளை பூர்த்தி செய்வதே காலனி நாடுகளுக்கு பிரதான  வேலையாக இருந்தது. பர்மாவில் அரிசி உற்பத்திக்கும், மலேசியாவில் ரப்பர் உற்பத்திக்கும், இலங்கையில் தேயிலை உற்பத்திக்கும் தமிழர்கள் தான் பெருமளவில் கூலி வேலை செய்து வந்தனர். இரண்டாம் உலகப்போரின் தொடக்கத்தில் தமிழர்களை ஓய்வின்றி வேலை செய்ய கொடுமைப்படுத்தி, பர்மாவில் உற்பத்தியான அரிசியையும், மலேசியாவில் உற்பத்தியான ரப்பரையும், இலங்கையில் உற்பத்தியான தேயிலையும் அதிகளவு தங்கள் நாட்டுக்கு ஏற்றுமதி செய்தது பிரிட்டிஷ்.

இதற்கிடையே, இரண்டாம் உலகப்போரில் ஆசியாவில் ஜப்பானின் கைகள் ஓங்கியது. இதன் பின்னணியில், பர்மாவையும் மலேசியாவையும் 1941-1945 வரை ஆக்கிரமித்து பிரிட்டிஷாரை கதறச் செய்தது ஜப்பான். இதையொட்டி, உணவு உற்பத்திக்கு பர்மாவை நம்பி இருந்த பிரிட்டிஷ், செய்வதறியாமல் கையை பிசைந்து நின்றது. அப்போது பிரிட்டிஷ் பிரதமர் வின்ஸ்டன் சர்ச்சில் ஒரு சதித்திட்டம் தீட்டினார். அதன்படி, இந்தியாவின் வங்காளத்தில் உற்பத்தி செய்யப்பட்ட மொத்த அரிசியையும் போர் வீரர்களுக்கு உணவளிக்க தங்கள் நாட்டுக்கு ஏற்றுமதி செய்து கொ‌ண்டது பிரிட்டிஷ். வின்ஸ்டன் சர்ச்சில் அரசியல் கொள்கையால் வங்காளத்தில் செயற்கை பஞ்சம் உருவானது. வின்ஸ்டன் சர்ச்சில் என்ற மனிதர் செய்த பேரழிவு (Man Made Disaster) வங்காளம் போதிய உணவின்றி கதிகலங்கியது.

ஜப்பான் ஆக்கிரமிப்பால் பர்மாவில் இருந்து வங்காளத்திற்கு வர வேண்டிய அரிசி இறக்குமதியும் தடைப்பட்டது. மேலும், பிரிட்டிஷாரின் அரிசி மறுப்புக் கொள்கை (Denial Policy of Rice) காரணமாக வங்காளத்தில் இருந்த அரிசி அடுக்குகள் (Stacks) இடிக்கப்பட்டது, வங்காள கடலோர மாவட்டங்களில் இருந்து அதிகப்படியான அரிசி அகற்றப்பட்டது மற்றும் வங்காளத்தில் உற்பத்தியான அரிசியை ஜப்பான் களவாட கூடாது என்றும், வங்காளத்தினரும் அரிசியை மறைத்து எடுத்து செல்லக் கூடாது என்றும் போக்குவரத்தை மறுப்பதற்காக வங்காளத்தில் இருந்த பல்லாயிரக்கணக்கான படகுகள் அகற்றப்பட்டது. மொத்தத்தில், வங்காளத்தின் அனைத்து அரிசி இயக்கத்தையும் பிரிட்டிஷ் நிறுத்தியது.

1943 இல் வங்காள பஞ்சம் (Bengal Famine) என்ற மோசமான பஞ்சத்தால் சுமார் 30 லட்சம் மக்கள் உயிரிழந்தனர். இப்பஞ்சத்திற்கு 1940 களில் ஏற்பட்ட வட இந்தியப் பெருங்கடல் சூறாவளியை பிரிட்டிஷ் காரணமாக கூறினாலும், வின்ஸ்டன் சர்ச்சில் அரங்கேற்றிய சதித்திட்டம் தான் முதன்மையானது. அரிசி மறுப்புக் கொள்கை அடிப்படையில் பிரிட்டிஷ் செயல்பட்டதும், வங்காள பஞ்சம் குறித்து "Indians are reproducing like rabbits and how come Mahatma Gandhi is still alive if the shortages were so severe?" என்று வின்ஸ்டன் சர்ச்சில் பேசியதும் கடுமையாக விமர்சிக்கப்பட்டது.

விவரணை

Colonial Bio-politics and the Great Bengal Famine of 1943


இன்று ஒரு தகவல் - 6

ஐயர்கள் சமஸ்கிருதத்தில் கொச்சையான மந்திரங்களை உச்சரித்து இந்து திருமணங்களை நடத்தி வைக்கிறார்கள். மற்றவர் திருமணங்களில் சொல்லப்படும் கொச்சையான மந்திரங்கள், ஐயர்கள் வீட்டு திருமணங்களில் சொல்லப்படுவதில்லை, மாறாக அவர்களுக்கு நேர்மறை மந்திரங்கள். மற்றவர் திருமணங்களை நடத்தி வைக்கும் ஐயர்கள் தங்கள் வீட்டு திருமணங்களை நடத்தி வைப்பதில்லை, மாறாக அவர்களுக்கு சாஸ்திரிகள் நடத்தி வைப்பர்.

இன்று ஒரு தகவல் - 7

அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் முனிரத்னா ஆனந்தகிருஷ்ணன் (Munirathna Anandakrishnan), உயர்கல்விக்கான நுழைவு தேர்வை ரத்து செய்து, ஒற்றை சாளர மாணவர் சேர்க்கை முறையை அறிமுகப்படுத்திய தி.மு.க அரசின் கொள்கை வரைமுறைக்கு (Policy Formation) வழிகாட்டியாக இருந்தார்.

இன்று ஒரு தகவல் - 8

2015 இல் சென்னையில் செயற்கை வெள்ளத்தில் சுமார் 400 பேர் இறந்தனர். குறிப்பாக மின்சார பாதிப்பால் MIOT மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 18 பேர் இறந்தது, 25 லட்சம் மக்களின் வீடுகள் தண்ணீரில் மூழ்கியது என்று சென்னையே ஸ்தம்பித்து நின்றது! 

2015 சென்னை வெள்ளம் குறித்து 2016-2017 காலகட்டத்தில் Comptroller and Auditor General of India (CAG) வெளியிட்ட அறிக்கையில் கூறியது யாதெனில்  "Due to all these factors, we conclude that the flooding was man-made in terms of the CWC guidelines". சுருக்கமாக சொன்னால், ஜெயலலிதாவின் ஆட்சி நிர்வாகத்தை குற்றம் சாட்டி 2015 சென்னை வெள்ளம் குறித்து வெளியான CAG அறிக்கையை முழுமையாக வாசிப்பதன் மூலம் Women Made Disaster குறித்து பல்வேறு தகவல்களை அறிந்து கொள்ள முடிகிறது.

விவரணை

Performance Audit of Flood Management in Chennai


இன்று ஒரு தகவல் - 9

காவிரி ஆறு தலைக்காவேரியில் இருந்து பாய்ந்து காவிரிப்பூம்பட்டினம் வழியாக வங்காள விரிகுடாவில் கலக்கிறது. அதாவது, காவிரி ஆறு குடகு மலையில் இருந்து தொடங்கி சுமார் 800 கிலோமீட்டர் பாய்ந்து வங்காள விரிகுடாவில் சங்கமிக்கிறது. "காவிரி புகும் பட்டினம்" என்ற பெயர் மருவி "காவிரிப்பூம்பட்டினம்" எனப் பெயர் பெற்றது.

தமிழர் நாகரீகத்தை பறைசாற்றும் சிலப்பதிகாரம் உட்பட பல்வேறு தமிழ் இலக்கியங்களில் காவிரிப்பூம்பட்டினம் சிறப்பான இடத்தைப் பெற்றுள்ளது. காவிரி என்றால் காவிரி ஆற்றை குறிக்கும். பட்டினம் என்றால் கடற்கரை நகரத்தை குறிக்கும். தமிழ்நாட்டில் கடல்சார் தொல்லியல் ஆராய்ச்சிக்கு காவிரிப்பூம்பட்டினம் பிரசித்தி பெற்றது ஆனால் தொடர் ஆராய்ச்சிக்கு பல்வேறு தடங்கல்கள் இருந்து வருவது வேதனைக்குரியது.

இன்று ஒரு தகவல் - 10

பங்குச்சந்தையில் பட்டியலிடப்பட்ட நிறுவனங்களை பொறுத்த வரையில் அதன் சந்தை மதிப்பை (Share Price) விட சந்தை மூலதனமே (Market Capitalization) முக்கியத்துவம் வாய்ந்தது. அவை Large Cap, Mid Cap, Small Cap என மூன்று வகைப்படும்.

இன்று ஒரு தகவல் - 11

ஒரு இந்திய பிரதமர் ஊடகங்களை நேரடியாக (Live) சந்தித்த கடைசி நாள் 03 ஜனவரி 2014. அவர் தான் முன்னாள் இந்திய பிரதமர் மன்மோகன் சிங். அன்றைய கடைசி பேட்டியின் போது அவர் சொன்னது "History will be kinder to me than the Media". 

இன்று ஒரு தகவல் - 12

அரியணை அரசியலில் இருந்து காமராஜரை ஒழித்து கட்டியது ராஜாஜி கோஷ்டி அல்ல, பக்தவத்சலம் கோஷ்டி தான்.

இன்று ஒரு தகவல் - 13

"திராவிடர்" என்ற இனம் சார்ந்த கருத்தியல் சொல்லாடல் தான் தமிழருக்கு, கன்னடருக்கு, தெலுங்கருக்கு, மலையாளிக்கு  பாதுகாப்பு, அதுவே திராவிட நாட்டுக்கு நிலவரணாகும். ஒரு வேளை 20 ஆம் நூற்றாண்டில் நம் அரசியல் முன்னோர்கள் "திராவிடர்" என்ற சொல்லுக்கு பதிலாக "தமிழர்" என்ற சொல்லாடலை பயன்படுத்தி அரசியல் செய்திருந்தால், அரசியல் அதிகாரத்தை பொறுத்த வரையில் நாம் இன்றைய நிலையை அடைந்திருக்க முடியாது. நமது சமதர்ம இலக்கை அடைய "திராவிடம்" தான் குறியீடு. 

இனம், நிலம், மொழி, சமூக நீதி என நமக்கு அரணாக நிற்கும் "திராவிடம்" என்ற சித்தாந்தம் அரசியல் இயங்குதளமாக இருக்கும் வரை, ஆரிய வந்தேறிகளை எதிர்க்க திராவிடமே Concrete Ideology. திராவிடம் என்ற கருத்தியல் தான் ஆரியர்களை "வந்தேறிகள்" என்று கதறவிடுகிறது. "ஆரியர் - திராவிடர்" போர் என்பதில் உள்ள திராவிடர் என்ற இன (Ethnicity - Your Race) அரசியல் சொல்லாடலுக்கு பதிலாக "ஆரியர் - தமிழர்" போர் என்றாக்கி தமிழர் என்ற அடையாள (Identity - Who You Are) அரசியலை நம் அரசியல் முன்னோர்கள் கைக்கொண்டு இருந்தால் இந்திய ஒன்றியத்தில் நம்முடைய உரிமைகளை நாம் என்றோ இழந்திருப்போம். ஏனெனில், "இனப்போர்" என்பது வலுவிழந்து மாநில அளவிலான பிரச்சனையாக சுருங்கி இருக்கும். 

நமக்கு கிடைத்த பெரியார், அண்ணா, கலைஞர் மற்றும் பற்பல திராவிட தலைவர்கள் "திராவிடம்" என்ற இன அரசியலை முன்னெடுத்த காரணத்தால் தான் நாம் இன்று மற்ற மாநிலங்களை விட குறிப்பிடத்தக்க அளவில் முன்னேறி இருக்கிறோம். இன அரசியலை கைவிட்டு அடையாள அரசியலை கைக்கொண்ட பிற மாநிலங்களின் வரலாறை படித்து பாருங்கள், உண்மை உங்களுக்கு புரியும். எடுத்துக்காட்டாக, ஆரிய சனாதனத்தை எதிர்த்து பெளத்தம் மற்றும் சமணம் கொள்கைகளை தந்த பீகார் மாநிலம், சுதந்திர இந்தியாவின் தொடக்கத்தில் பற்பல மாநிலங்களை விட முன்னேறிய மாநிலமாக இருந்தது. ஆனால் இன அரசியலை கைவிட்டு அடையாள அரசியலை "பீகாரிகள்" விருப்பமாக கைக்கொண்ட பிறகு வேகமாக வீழ்ச்சி அடைய தொடங்கி இன்று இந்தியாவின் மிக பின்தங்கிய மாநிலங்களில் ஒன்றாக உள்ளது.

இன்று ஒரு தகவல் - 14

இன்று பால் பண்ணை, கோழிப் பண்ணை, ஆட்டுப் பண்ணை, கரும்பு பண்ணை, வேளான் பண்ணை என்று பல்வேறு வர்த்தக பண்ணைகள் இருப்பது போல "அடிமை ஆட்சிமுறை" தழைத்தோங்கிய காலக்கட்டத்தில் மேற்கு உலகில் (குறிப்பாக அமெரிக்கா மற்றும் ஐரோப்பா) அடிமை விற்பனை பண்ணை (Slave Trading Farm) இருந்தது.

இன்று ஒரு தகவல் - 15

2000 களில் Mysore Mallige Scandal மற்றும் DPS MMS Scandal போன்ற ஆபாச காணொளிகள் (Porn Video's) ஏற்படுத்திய தாக்கங்கள் இந்தியாவில் கணினி குற்றங்கள் துறை மற்றும் அதன் சட்டங்களை (Cyber Crime Law) மேம்படுத்த அடிகோலியது. காலப்போக்கில், Porn Video's வணிக மயமான பின் இன்று "நிதி மோசடிகள்" Cyber Crime துறையின் தேவையை அதிகரித்துள்ளது.

இன்று ஒரு தகவல் - 16

பழனி கோவிலில் நவபாஷாண முருகன் சிலையை செய்தவர் போகர் சித்தர். அவருக்கு உறுதுணையாக இருந்தவர் புலிப்பாணி சித்தர். இந்த பின்னணியில், பழனி கோவிலில் கருவறை பூஜைகளை செய்து வந்த தமிழ் பூசாரிகள், புலிப்பாணி சித்தர் வகையறாவை சேர்ந்த சைவ பண்டாரங்கள் ஆவர். 

நாயக்கர் ஆட்சியில், பார்ப்பனரான தளவாய் ராமப்பா அய்யன், பழனி கோவிலுக்கு வந்த போது தமிழ் பூசாரிகள் கையில் பிரசாதம் வாங்க கூடாது என்று எண்ணினார். அதையொட்டி, சதித்திட்டம் தீட்டிய ராமப்பா அய்யன் ஆசை காட்டி தமிழ் பூசாரிகளை பழனி கோவிலில் இருந்து விரட்டிவிட்டு சமஸ்கிருத பூஜைகளை செய்ய ஏதுவாக ஆரிய பார்ப்பனர்களை கோவிலில் பணிக்கு அமர்த்தினார். இது ஒரு கட்டுக்கதை அல்ல, நடந்த கதை. இதற்கு, ஆதாரமாக செப்பு பட்டயங்கள் உள்ளது குறிப்பிடத்தக்கது.

விவரணை

பார்ப்பனர்களால் திருடப்பட்ட பழனி மலைக்கோயில்


பின் குறிப்பு - பிரலமான தலைவருக்கு தங்க பஸ்பம் செய்ய நவபாஷாண முருகன் சிலையை "சிலர்" சுரண்டி எடுத்துவர அதனால் சுருங்கி போன முருகன் சிலையை மாற்றி வேறொரு சிலையை வைத்ததாகவும், கொடைக்கானலில் அறியப்படாத ரகசிய இடத்தில் போகர் சித்தர் இன்னொரு முருகன் சிலையை வைத்துள்ளதாகவும் தகவல்கள் உள்ளன.

இன்று ஒரு தகவல் - 17

தனக்கு முன்னால் கண்டுபிடிக்கப்பட்ட இயந்திரங்களை தாமஸ் ஆல்வா எடிசன் மெருகேற்றி விஞ்ஞான உலகில் பிரபலமடைந்தார். பிறகு தாமஸ் ஆல்வா எடிசனால் கண்டுபிடிக்கப்பட்ட இயந்திரங்களை அடுத்தடுத்த ஆராய்ச்சியாளர்கள் மெருகேற்றினர்.

தாமஸ் ஆல்வா எடிசன் கண்டுபிடிப்பு மற்றும் அதன் வளர்ச்சி ⏬

*Quadruplex Telegraph (Users Need Morse Code) = Thomas Alva Edison (1874)

*Telephone (Users No Need Morse Code) = Alexander Graham Bell (1876)

*Kinetoscope (No Projector) = Thomas Alva Edison / W. K. L. Dickson (1891)

*Cinematograph (With Projector) = Lumiere Brothers (1895)

*Phonograph (Tinfoil Paper) = Thomas Alva Edison (1877)

*Gramophone (Wax Based) = Chichester Bell / Charles Sumner Tainter (1886)

*Direct Current (One Direction) = Thomas Alva Edison (1878)

*Alternate Current (Changes Direction) = Tesla (1888)

உலகின் மிக முக்கியமான விஞ்ஞானிகளில் ஒருவரான  தாமஸ் ஆல்வா எடிசன், நிக்கோலா டெஸ்லாவின் Alternate Current (AC) கண்டுபிடிப்பை தோல்வியடைய செய்ய பெரும் முயற்சி செய்தார். இருவருக்குமான போராட்டத்தை "War of Currents" என்று ஆய்வறிஞர்கள் அழைப்பர்.

தாமஸ் ஆல்வா எடிசன் உட்பட பலரும் எவ்வளவோ மின்சாதனங்களை கண்டுபிடித்து இருந்தாலும் இன்று அதனை எல்லாம் இயக்குவது நிக்கோலா டெஸ்லாவின் கண்டுபிடிப்பான AC தான். உலகின் 80% மின்சாதனங்கள் நிக்கோலா டெஸ்லாவின் AC தான் இயக்குகிறது. தனது Free Energy, 3-6-9 போன்ற சில ஆராய்ச்சிகள் முடிவு பெறாமல் சர்சைக்குரிய வகையில் டெஸ்லா மரணமடைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இன்று ஒரு தகவல் - 18

சதி லீலாவதி (1936) திரைப்படம் மூலம் துணை நடிகராக அறிமுகமான M.G.R, ராஜகுமாரி (1947) மூலம் கதாநாயகனாக ஏற்றம் பெற்றார். தொடர்ந்து மருதநாட்டு இளவரசி, மந்திரி குமாரி, மலைக்கள்ளன், புதுமைப்பித்தன், அரசிளங்குமரி, காஞ்சித் தலைவன் மூலம் உச்ச நட்சத்திரமாக உயர்ந்தார். மேற்கண்ட திரைப்படங்கள் கலைஞரின் கைவண்ணத்தில் M.G.R கதாநாயகனாக நடித்தவை ஆகும். புதுமைப்பித்தன் திரைப்படத்தில் தான் M.G.R அவர்களுக்கு "புரட்சி நடிகர்" பட்டத்தை கலைஞர் சூட்டினார். 

திரையுலகில், சூப்பர் ஸ்டாரையும் உலக நாயகனையும் செதுக்கியது கே.பாலசந்தர் என்று சொல்வது போல, அந்த இரு திரை நட்சத்திரங்களுக்கு முன்னவர்களான நடிகர் திலகத்தையும் புரட்சி நடிகரையும் செதுக்கியது கலைஞர் என்று சொன்னால் மிகையாகாது. சிலை அழகாக காட்சியளிக்க சிற்பியின் கைவண்ணம் தானே முக்கியம். இங்கே சிலையாக நடிகர்கள், செதுக்கிய சிற்பியாக கலைஞர்.

இன்று ஒரு தகவல் - 19

சுதந்திர தாகம் கொண்ட வ.உ.சி அவர்கள், இந்திய முதலீட்டாளர்களிடமிருந்து பணத்தை திரட்டி, பிரிட்டிஷ் கப்பல் நிறுவனத்திற்கு எதிராக சுதேசி கப்பல் நிறுவனத்தை அமைக்க தனது சகாக்களுடன் கை கோர்த்தார். 1906 இல் வ.உ.சியால் தொடங்கப்பட்ட சுதேசி கப்பல் நிறுவனம் தூத்துக்குடிக்கும் கொழும்புக்கும் இடையே கப்பல்களை இயக்கியது. ஒரு கட்டத்தில் பிரிட்டிஷ் அரசு, வ.உ.சியை சிறைக்கு அனுப்பிய போது அவரது சகாக்கள் பிரிட்டிஷ் அரசின் அழுத்தத்தை கடுமையாயக எதிர்த்து போராடாமல், 1911 இல் சுதேசி கப்பல் நிறுவனத்தை கலைத்து பிரிட்டிஷ் கப்பல் நிறுவனத்திற்கே விற்றனர். இதனால், காந்தியின் சுதேசி இயக்கத்திற்கே முன் மாதிரியாக சுதேசி திட்டத்தை முன்னெடுத்த வ.உ.சியின் முயற்சி வீணானது. இதனை அறிந்த உடைந்து போன வ.உ.சியும் சிறையில் இருந்து வந்த பிறகு மளிகை கடை வைத்து வாழ்ந்தார்.

இப்போது, சிறை கம்பிகளுக்கு பின்னால் இருக்கும் உமர் காலித், அவரது சக நண்பராக விளங்கிய ஷெஹ்லா ரஷீத் போராளியாக இருந்து துரோகியாக மாறி இருப்பதை பார்க்கும் போது உடைந்து போய் விடுவார். இந்நாட்டின் இரத்த சரித்திரத்தில் எத்தனையோ போராளிகள்! எத்தனையோ துரோகிகள்!

இன்று ஒரு தகவல் - 20

1990 களின் பிற்பகுதியில், John Antioco நடத்தி வந்த Blockbuster நிறுவனம் அமெரிக்காவில் Video Casette (VHS Tapes - Video Home System Tapes) வாடகை வணிகத்தில் ஆதிக்கம் செலுத்தியது. தாமதக் கட்டணங்கள் மூலம் கோடிக்கணக்கான வருவாய் ஈட்டியது. 

Blockbuster நிறுவனத்தின் தாமதக் கட்டணத்தில் ஏற்பட்ட ஏமாற்றமான அனுபவத்திற்கு பிறகு, Marc Randolph உடன் இணைந்து Reed Hastings Netflix நிறுவனத்தை நிறுவினார். வளர்ந்து வரும் DVD (DVD - Digital Versatile Disc) தொழில்நுட்பத்தை பயன்படுத்தி கொண்ட Netflix நிறுவனம், Video Casette பதிலாக வாடிக்கையாளர்களுக்கு Video Disc அனுப்பியது. Blockbuster நிறுவனத்தில் இருந்து வேறுபடுத்த, தாமதக் கட்டணங்களை நீக்கி வாடிக்கையாளர்கள் விரும்பும் வரை Video Disc வைத்திருக்க அனுமதிக்கும் வகையில் கவர்ச்சிகரமான சந்தாவை அறிமுகம் செய்தது Netflix நிறுவனம்.

2000 வாக்கில், வளர்ந்து வரும் Netflix நிறுவனத்தை $50 மில்லியன் தொகைக்கு வாங்கி கொள்ளுமாறு Blockbuster நிறுவனத்திடம் Netflix நிறுவனம் கோரியது. "ஒரு சிறு வணிக நிறுவனத்தை வாங்க விருப்பமில்லை" எனக்கூறி Netflix நிறுவனத்தின் கோரிக்கையை Blockbuster நிறுவனம் நிராகரித்து. இந்நிலையில், ஆரம்ப சவால்களையும் Blockbuster நிறுவனத்தின் நிராகரிப்பையும் சமாளித்து, சந்தாதாரர்களை சீராக பெற்று Netflix நிறுவனம் வளர தொடங்கியது.

ஒரு கட்டத்தில், Blockbuster நிறுவனம் Online சேவையில் நுழைந்து பின்னடைவை சந்தித்தது, தாமதக் கட்டணங்களை கைவிட்டாலும் Netflix நிறுவனத்தின் சந்தா மாதிரியுடன் போட்டியிட தவறியது. இறுதியில், 2010 இல் தோல்வியுற்ற உத்திகள் மற்றும் மோசமான நிதிநிலை காரணமாக Blockbuster நிறுவனம் திவால் ஆனது. கிட்டத்தட்ட 5,800 கடைகளை  கொண்டிருந்த Blockbuster, இப்போது அமெரிக்காவில் ஒரே ஒரு கடையை மட்டுமே கொண்டுள்ளது. இதற்கு நேர்மாறாக, DVD வாடகையில் இருந்து தொடங்கி இன்று Streaming OTT தொழில்நுட்பத்தின் மூலம் Netflix நிறுவனம் தனிக்காட்டு ராஜாவாக செழித்து வருகிறது.

விவரணை

Blockbuster laughed at us. Now there's one left - Netflix Co-founder


இன்று ஒரு தகவல் - 21

நிறுவனமயப்படுத்தப்பட்ட மதங்கள் நிறுவப்படுவதற்கு முன்பு, பண்டைய சமூகங்களின் இயற்கை வழிபாட்டில் சூரியன் முக்கிய பங்கு வகித்தது. இதன் விளைவாக, பிரமிடுகள், சிச்சென் இட்சா, ஸ்டோன்ஹெஞ்ச், அங்கோர் வாட், மச்சு பிச்சு, வாலே டெய் டெம்ப்லி போன்ற கட்டமைப்புகள் சூரிய உதயம் மற்றும் சூரிய அஸ்தமனம் பற்றிய அறிவியல் புரிதலுடன் வடிவமைக்கப்பட்டுள்ளன. பண்டைய எகிப்து, மாயன், கெமர், இன்கா போன்ற நாகரிகங்களின் கட்டிடக்கலை நுணுக்கங்கள் அவற்றின் கட்டுமானத்தில் வானியல் நடைமுறைப் பயன்பாட்டை நிரூபிக்கின்றன. 

தொல்லியல் சார்ந்த வானியல் துறை (Archaeoastronomy) என்பது நட்சத்திரங்களை பற்றிய ஆய்வு மற்றும் பழங்கால கட்டமைப்புகளுடன் அவற்றின் சாத்தியமான தொடர்புகளை உள்ளடக்கியதாகும். பண்டைய நாகரிகங்கள் எவ்வாறு வானியல் நிகழ்வுகளைப் புரிந்துகொண்டன, அவற்றைப் பயன்படுத்தின மற்றும் வானவியலைத் தங்கள் கலாச்சாரங்களில் ஒருங்கிணைத்தன என்பதை இந்த பல்துறை ஆய்வு ஆராய்கிறது. இருப்பினும், மதங்களின் வளர்ச்சிக்கு பிறகு, வானியல் அறிவியலின் முக்கியத்துவம் குறைந்து, கடவுள் சார்ந்த ஜோதிடம் மற்றும் போலி அறிவியல் நம்பிக்கைகளுக்கு வழிவகுத்தது.

இன்று ஒரு தகவல் - 22

இலங்கை சுதந்திரக் கட்சி, இலங்கையின் முக்கிய அரசியல் கட்சிகளில் ஒன்றாகும், இது 1951 இல் பண்டாரநாயக்காவால் நிறுவப்பட்டது. 1959 இல் பிரதமர் பண்டாரநாயக்கா பௌத்த பிக்கு ஒருவரால் படுகொலை செய்யப்பட்டதை தொடர்ந்து, அவரது மனைவி சிறிமாவோ பண்டாரநாயக்க 1960 இல் நடைபெற்ற இலங்கைத் தேர்தலில் மாபெரும் வெற்றி பெற்று உலகின் முதல் பெண் பிரதமர் ஆனார். இவர்களின் மகள் சந்திரிகா குமாரதுங்கா பின்னர் இலங்கையின் ஜனாதிபதியானார். 1999 இல் தனது ஜனாதிபதி தேர்தல் பிரச்சாரத்தின் போது விடுதலைப் புலிகளின் மனித வெடிகுண்டு தாக்குதலில் சந்திரிகா குமாரதுங்கா உயிர் பிழைத்தார், இதன் விளைவாக வலது கண்ணை இழந்தார்.

பின்னர், சந்திரிகா குமாரதுங்காவின் வலதுகரமாக இருந்த மகிந்த ராஜபக்சே இலங்கை அரசுத் தலைவராக இருந்துள்ளார். இவருடைய ஆட்சிக் காலத்தில் தான் ஈழப் போராட்டங்களில் பெரும் பகுதி இடம் பெற்றது, இறுதியில் உள்நாட்டு போரை முடிவுக்கு கொண்டு வந்தது. தற்போது, ​​மைத்திரி பால சிறிசேன இலங்கை சுதந்திரக் கட்சிக்கு தலைமை தாங்குகிறார், மஹிந்த ராஜபக்ச இலங்கை பொதுஜன பெரமுனவின் தலைவராக செயற்படுகிறார்.

இன்று ஒரு தகவல் - 23

அமெரிக்க புரட்சி (1775–1783) = சுதந்திர வர்க்கம் (பிரிட்டிஷ் காலனி ஆட்சியை எதிர்த்து அமெரிக்க மக்களின் போராட்டம்).

பிரான்சு புரட்சி (1789–1799) = சமத்துவ வர்க்கம் (நிலபிரபுத்துவ ஆட்சியை எதிர்த்து பிரான்சு மக்களின் போராட்டம்)

ரஷ்ய புரட்சி (1917) = தொழிலாளர் வர்க்கம் (முதலாளித்துவ ஆட்சியை எதிர்த்து ரஷ்ய மக்களின் போராட்டம்).

சீன புரட்சி (1949) = தேசிய வர்க்கம் (ஏகாதிபத்திய ஆட்சியை எதிர்த்து சீன மக்களின் போராட்டம்).

இன்று ஒரு தகவல் - 24

வ.உ.சிதம்பரம், 1906 இல் பிரிட்டிஷ் காலனி ஆட்சியை எதிர்த்து சுதேசி இயக்கத்தின் வெள்ளோட்டமாக, பலரின் ஆதரவுடன் ரூ. 10 லட்சம் முதலீட்டில் மதுரையில் நான்காம் தமிழ்ச் சங்கத்தை அமைத்த பாண்டிதுரையை தலைவராக கொண்டு, இந்தியர்களே தங்களின் கப்பல் போக்குவரத்தை பூர்த்தி செய்வதற்காக Swadeshi Steam Navigation Company (SSSNC) நிறுவனம் தொடங்கினார். இந்திய தேசியவாதத்தை ஊக்குவித்த வ.உ.சிதம்பரம், தனது பிரிட்டிஷ் எதிர்ப்பு நடவடிக்கைகளுக்காக 1908 இல் கைது செய்யப்பட்டார்.

SSSNC நிறுவனத்திற்கு ஆரம்ப வெற்றிகள் இருந்த போதிலும், வ.உ.சிதம்பரம் சிறையில் இருந்த போது, நிர்வாக கோளாறுகளால் திணறிக் கொண்டிருந்த SSSNC நிறுவனத்தை பிரிட்டிஷ் அரசு தனது சட்ட நடவடிக்கைகள் மூலம் மிரட்டி வந்த சூழலில், 1911 இல் SSSNC கலைக்கப்பட்டது, அதன் போட்டியாளர்களுக்கே விற்கப்பட்டது.

இன்று ஒரு தகவல் - 25

"தமிழ் தாத்தா" என்று அழைக்கப்படும் உ.வே. சாமிநாதன், மீனாட்சி சுந்தரத்தின் மாணவராகவும், கவிமணி தேசிய விநாயகத்தின் நண்பராகவும் விளங்கியவர். முக்கிய தமிழ் அறிஞராக அறியப்படுகிற அவர், பல நூற்றுக்கும் மேற்பட்ட தமிழ் இலக்கிய பனை ஓலை கையெழுத்துகளை சேகரித்து, அவற்றை கோர்வையாக்கி பதிப்பித்துள்ளார்.

உ.வே.சா பதிப்பித்த முக்கிய நூல்கள் = சீவகசிந்தாமணி (1887), பத்துப் பாட்டு (1889), சிலப்பதிகாரம் (1892), புற நானூறு (1894), புறப்பொருள் வெண்பாமாலை (1895), மணிமேகலை (1898), ஐங்குறு நூறு (1903), பதிற்றுப் பத்து (1904), மீனாட்சிசுந்தரம் பிள்ளை பிரபந்தத் திரட்டு (1910), பரிபாடல் (1918), பெருங்கதை (1924), நன்னூல் - மயிலைநாதர் உரை (1925), நன்னூல் - சங்கர நமசிவாயர் உரை (1928), தக்கயாகப் பரணி (1930), சிவக்கொழுந்து தேசிகர் பிரபந்தத் திரட்டு (1932), உதய குமாரகாவியம் (1935), தமிழ் நெறி விளக்கம் (1937), குமர குருபரர் பிரபந்தக் திரட்டு (1939).

விவரணை


வாசித்தமைக்கு நன்றி.

வணக்கம்.

Sunday, February 11, 2024

சேடப்பட்டியும் ஒத்த ஓட்டும்

சேடப்பட்டியும் ஒத்த ஓட்டும்

கேள்விஇந்திரா காந்தி அரசு மற்றும் சேடபட்டி சூர்யநாராயண ராஜேந்திரன் என்ற நடிகர் S.S.R தொடர்புடைய "அரசியல் நிகழ்வு" என்ன?
பதில் =  1970 இல் பிரதமர் இந்திரா காந்தி, இந்திய மன்னர்களுக்கு வழங்கப்பட்டு வந்த மானியங்களை ரத்து செய்யும் வகையில் "மன்னர் மானிய ஒழிப்பு" (Abolition of Privy Purse) மசோதாவை நாடாளுமன்றத்தில் அறிமுகப்படுத்தினார், அது மக்களவையில் நிறைவேற்றப்பட்டது. ஆனால், மாநிலங்களவையில் ஆதரவாக 149 ஓட்டுகளும் எதிராக 75 ஓட்டுகளும் பதிவாகி , தேவையான மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மையை அடைய ஒரு வாக்கு வித்தியாசத்தில் மசோதா தோல்வியடைந்தது. இம்மசோதா நிறைவேற்றப்படாமல் போனது இந்திரா காந்தியின் அரசியல் கவர்ச்சிக்கு பேரிடியாக அமைந்தது. அன்று பிரதமர் இந்திரா காந்தியின் சமூக சீர்திருத்தங்களை தி.மு.க ஆதரித்த போதும், அந்த ஒரு வாக்கை தி.மு.க மாநிலங்கவை உறுப்பினர் நடிகர் S.S.R செலுத்தவில்லை.

இதற்கு, “நான் விரைவதற்குள் மாநிலங்களவை கதவுகள் மூடப்பட்டதே தான் வாக்களிக்க இயலாமல் போனதற்கு காரணம்” என்று SSR விளக்கம் அளித்தார். மசோதாவை மறைமுகமாக எதிர்க்க SSR அவர்களுக்கு இந்திரா காந்தியின் எதிரணியினர் லஞ்சம் கொடுத்ததாக கிசுகிசுக்கப்பட்டது. இந்த மசோதா வாக்கெடுப்பு சர்ச்சைக்கு பிறகு நடிகர் SSR இன் அரசியல் வாழ்வும் திரை வாழ்வும் இறங்கு முகம் கண்டது.

இதே காலகட்டத்தில் காமராஜர், மொரார்ஜி தேசாய், நிஜலிங்கப்பா போன்ற மூத்த காங்கிரஸ் தலைவர்களால் பிரதமர் இந்திரா காந்தி ஓரங்கட்டப்பட்டு, காங்கிரஸில் ஏற்பட்ட பிளவு காரணமாக இந்திரா காந்தியின் அரசு சிறுபான்மை அரசாக பதவி வகித்தது. இருப்பினும், கம்யூனிஸ்ட் மற்றும் தி.மு.க போன்ற கட்சிகளின் பிரச்சினை அடிப்படையிலான ஆதரவுடன் (Issue-based Support) ஆட்சியில் நீடித்தது. சமூகவுடைமை (Socialism) கொள்கைகளை வலியுறுத்தி ஆட்சி செய்து வந்த இந்திரா காந்தி, தனது அரசியல் நிலையை வலுப்படுத்தி, காங்கிரஸை பலமான ஆளுங்கட்சியாக நிலைநிறுத்த வேண்டும் என்ற நோக்கத்தில், 1970 டிசம்பரில் மக்களவையை ஓராண்டு முன்னதாகவே கலைத்து, 1971 இல் பொதுத் தேர்தலை சந்தித்தார். 1971 இல் இந்திரா காந்தியின் காங்கிரஸ் மாபெரும் வெற்றி பெற்று மீண்டும் ஆட்சிக்கு வந்த பின்னர் “மன்னர் மானிய ஒழிப்பு மசோதா” மீண்டும் அறிமுகப்படுத்தப்பட்டு இந்திய அரசியலமைப்பின் 26 வது சட்ட திருத்தமாக வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டது.

கேள்வி = ஜெயலலிதா மற்றும் சேடப்பட்டி முத்தையா தொடர்புடைய "அரசியல் நிகழ்வு" என்ன?
பதில் = 1991 முதல் 1996 வரை தமிழ்நாடு சட்டமன்ற சபாநாயகராக சேடப்பட்டி முத்தையா இருந்த போது எழுந்த ஊழல் குற்றச்சாட்டின் பேரில் 1999 இல் தி.மு.க அரசால் சேடபட்டி முத்தையா மீது நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இதையெடுத்து, அ.தி.மு.க சார்பில் ஒன்றிய அமைச்சரான சேடபட்டி முத்தையா தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்று ஜெயலலிதாவிடம் பிரதமர் வாஜ்பாய் கோரிக்கை விடுத்தார். இந்த பின்னணியில், ஜெயலலிதாவின் உத்தரவை தொடர்ந்து சேடபட்டி முத்தையா தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார். இதற்கு பின்னர், பதிலுக்கு ஊழல் குற்றச்சாட்டுகளை காரணம் காட்டி, ஒன்றிய அமைச்சர்களான பூட்டா சிங், ராமகிருஷ்ணா ஹெக்டே, ராம் ஜெத்மலானி ஆகியோரை அமைச்சர் பதவியில் இருந்து பிரதமர் வாஜ்பாய் நீக்க வேண்டும் அல்லது சேடப்பட்டி முத்தையாவை மீண்டும் தனது அமைச்சரவையில் வாஜ்பாய் சேர்க்க வேண்டும் என்று வலியுறுத்தினார். இந்நிலையில், பூட்டா சிங்கின் அமைச்சர் பதவியை பறித்த வாஜ்பாய் மற்ற இருவரையும் அமைச்சர் பதவியில் இருந்து நீக்கவும் சேடப்பட்டி முத்தையாவை அமைச்சரவையில் சேர்க்கவும் இணங்கவில்லை.

இவ்வாறு, வாஜ்பாய் அரசுக்கு பல்வேறு குடைச்சல்களை கொடுத்து வந்த ஜெயலலிதா ஒரு கட்டத்தில் வாஜ்பாய் அரசுக்கு அளித்து வந்த ஆதரவை விலக்கி கொண்டார். இதை தொடர்ந்து, 1999 இல் நாடாளுமன்றத்தில் நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் ஆதரவாக 269 வாக்குகளும், எதிராக 270 வாக்குகளும் பெற்று ஒரு வாக்கு வித்தியாசத்தில் பிரதமர் வாஜ்பாய் (பா.ஜ.க) அரசு கவிழ்ந்தது. இந்நிலையில், அ.தி.மு.க நாடாளுமன்ற உறுப்பினர் சேடப்பட்டி முத்தையா, நம்பிக்கை வாக்கெடுப்புக்கு அளிக்கப்பட்ட சீட்டில் வாக்களிக்காமல் (Abstained) அதை தனது பாக்கெட்டில் வைத்திருந்தார். ஜெயலலிதாவின் அ.தி.மு.க நிலைப்பாட்டின்படி, பா.ஜ.க அரசுக்கு எதிராக வாக்களிக்காமல், பா.ஜ.க அரசிடம் விலைப் போனதாலே நடுநிலை வகித்தார் என்று எழுந்த குற்றச்சாட்டு சேடப்பட்டி முத்தையாவின் அரசியல் வாழ்வை வெகுவாக பாதித்தது.

இந்த சம்பவத்திற்கு பிறகு, கட்சி நடவடிக்கைகளில் சேடபட்டி முத்தையாவை ஜெயலலிதா ஒதுக்கியே வைத்திருந்தார். சில ஆண்டுகளுக்கு பிறகு உடல் நலக்குறைவு ஏற்பட்டு மருத்துவமனையில் இருந்த போது சேடப்பட்டி முத்தையா நிதியுதவி கேட்டு ஜெயலலிதாவுக்கு கடிதம் அனுப்பினார். ஜெயலலிதாவிடம் இருந்து எந்த பதிலும் வராததால் விரக்தியடைந்தவர், அ.தி.மு.கவில் இருந்து விலகி 2006 இல் தி.மு.கவில் இணைந்தார்.

முடிவுரை = சுருக்கமாகச் சொன்னால், "ஒத்த ஓட்டு" இரண்டு சேடப்பட்டியார்களின் அரசியல் வாழ்க்கையை உலுக்கியது. 1970 இல் சேடபட்டி சூர்யநாராயண ராஜேந்திரன் (நடிகர் S.S.R) மற்றும்  1999 இல் சேடபட்டி முத்தையா.

வாசித்தமைக்கு நன்றி.

வணக்கம்.

Saturday, February 10, 2024

சில கேள்விகள் சில பதில்கள்

சில கேள்விகள் சில பதில்கள்
1.கேள்வி = இந்திய கடல்சார் படிப்புக்கு வித்திட்டவர் யார்?

1.பதில் = வழக்கறிஞர் பி.எஸ்.சிவசாமி, 12.01.1922 அன்று சட்டப்பேரவையில் "இந்தியாவில் கடல்சார் கல்லூரியை நிறுவ வேண்டும்" என்ற முன்வைத்த தீர்மானம் கடல்சார் படிப்புக்கு வித்திட்டது.


2.கேள்வி = நவீன உலகில் அதிகாரப்பூர்வமாக பதிவு செய்யப்பட்ட முதல் சைபர் தாக்குதலை (Cyber-terrorism) மேற்கொண்டது யார்?

2.பதில் = 1997 இல் இலங்கை அரசுக்கு எதிராக விடுதலைப் புலிகள் முதல் சைபர் தாக்குதலை மேற்கொண்டது.


3.கேள்வி = பழங்காலத்தில் நிறுவனங்கள் தங்கள் வணிகத்தை எவ்வாறு தணிக்கை (Audit) செய்தன?

3.பதில் = பதிவேடு (Register)

4.கேள்வி = நவீன உலகின் முதல் Digital கடிகாரம் எது?

4.பதில் = 1972 இல் ஹாமில்டன் (Hamilton) நிறுவனத்தால் அறிமுகப்படுத்தப்பட்ட பல்சர் (Pulsar) கடிகாரம்.


5.கேள்வி = இந்தியாவில் "கணினி அறிவியலுக்கும் ஈரோடு மாநகருக்கும்" உள்ள சுவாரஸ்யமான தொடர்பு என்ன?

5.பதில் = இந்தியாவில் கான்பூரில் உள்ள இந்திய தொழில்நுட்ப கழகத்தில் முதன்முதலில் கணினி அறிவியல் பாடத்திட்டத்தை நிறுவியவர் வைத்தீஸ்வரன் ராஜாராமன், இந்தியாவில் கணினி அறிவியல் பாடத்திட்டத்தில் முனைவர் பட்டம் பெற்ற முதல் மூவரில் ஒருவர் பி.ஏ.வெங்கடாசலம், மெட்ராஸ் கிண்டி பொறியியல் கல்லூரிக்கு சென்று கணினிகளின் செயல்பாடுகளை பற்றி அறிந்து கொண்டு அறிவியல் வளர்ச்சியில் கணினிகள் முக்கியப் பங்கு வகிக்கும் என்று பேசியவர் பெரியார். 1960 காலகட்டத்தில் கணினியின் முக்கியத்துவத்தை அறிந்த மேற்கூறிய 3 ஆளுமைகளும் ஈரோட்டைச் சேர்ந்தவர்கள்.

6.கேள்வி = டெல்லியில் ஒரு கூட்டத்திற்கு செல்லும் வழியில் காந்தி கொல்லப்பட்டார். அதென்ன கூட்டம்?

6.பதில் = காந்தி டெல்லியில் உள்ள பிர்லா மாளிகையின் பின்புற தோட்டத்தில் தனது தினசரி அனைத்து மத பிரார்த்தனை கூட்டத்திற்கு செல்லும் வழியில் கொல்லப்பட்டார்.

7.கேள்வி = இந்தியாவில் முதல் பாலிடெக்னிக் (Polytechnic) கல்லூரியை தொடங்க வித்திட்டவர் யார்?

7.பதில் = கோபால்சாமி துரைசாமி நாயுடு (G.D.நாயுடு)


8.கேள்வி = நிலவில் கால் பதித்த முதல் மனிதர் நீல் ஆம்ஸ்ட்ராங். அவருக்கு முன்பே நிலவில் கால் பதிக்க வேண்டியவர் விபத்தில் இறந்து விட்டார். அவர் யார்?

8.பதில் = குஸ் கிரிஸ்ஸம் (Gus Grissom), இறந்த வருடம் 1967, பணி = Apollo 1


9.கேள்வி = அமெரிக்காவுக்கு சுதந்திர நாளான  ஜூலை 4 இந்தியாவுக்கும் ஒரு முக்கியமான நாள் தான். அதென்ன முக்கியத்துவம்?

9.பதில் = 4 ஜூலை 1947 அன்று இந்தியா மற்றும் பாகிஸ்தான் குறித்தான "சுதந்திர மசோதா" பிரிட்டன் பாராளுமன்ற சபையில் சமர்ப்பிக்கப்பட்டது.


10.கேள்வி = மருத்துவ ஆய்வக உலகில் "என்றும் அழியாத" பெண்மணி யார்?

10.பதில் =  காலவரையின்றி இனப்பெருக்கம் செய்யக்கூடிய ஒரே மனித உயிரணு வரிசையாக இருக்கும் ஹீலா உயிரணுக்களை (Hela Cells) கொடுத்த ஹென்ஹிட்டா லாக்ஸ் (Henrietta Lacks) மருத்துவ ஆய்வக உலகில் "என்றும் அழியாத" பெண்மணி என்று அழைக்கப்படுகிறார்.


11.கேள்வி = உலகின் அனைத்து இசை மரபுகளும் நமது பழந்தமிழ் இசை இலக்கணத்திலிருந்து வந்தவை என்பதை நிறுவிய தமிழிசையின் தந்தை யார்?

11.பதில் = ஆபிரகாம் பண்டிதர்


12.கேள்வி = இரண்டு கிரேக்க அறிஞர்களின் நூல்களை முன்மாதிரியாக கொண்டு, நவீன உலகின் அரசியல் மன்றமும் நீதி மன்றமும் வடிவமைக்கப்பட்டன. அந்த அறிஞர்கள் யார்?

12.பதில் = அரிசுட்டாட்டில் மற்றும் பிளேட்டோ (Aristotle and Plato)

13.கேள்வி = பிரிட்டிஷ் அரசிடம் மன்னிப்பு கேட்டு சாவர்க்கர் எழுதிய மன்னிப்பு கடிதங்கள் எத்தனை?

13.பதில் = 5 கடிதங்கள் (எழுதிய வருடம் = 1911, 1913, 1914, 1918 and 1920).


14.கேள்வி = 1971 இல் புரூஸ் லீ கூறிய "நீர் போல் இரு நண்பா" (Be Water, My Friend) என்பது பிரபலமான கூற்றாகும். அது போல, சுமார் 3000 ஆண்டுகளுக்கு முன் தமிழறிஞர் கணியன் பூங்குன்றன் இயற்றிய "யாதும் ஊரே யாவரும் கேளிர்" பாடலில் வாழ்க்கையை நீருடன் இணைத்து உவமையாக ஒரு வரி உள்ளது. அதென்ன?

14.பதில் ⏬  

பாடல் வரி = நீர்வழிப் படூஉம் புணைபோல், ஆருயிர் முறைவழிப் படூஉம் என்பது திறவோர்

பொருள் = நீரின் போக்கில் செல்லும் தெப்பம்போல உயிர்வினைப்படி செல்லும்.

15.கேள்வி = இந்திய உச்ச நீதிமன்றத்தில் 13 நீதிபதிகளைக் கொண்டு விசாரிக்கப்பட்ட வழக்கு எது?

15.பதில் = கேசவானந்த பாரதி வழக்கு.


16.கேள்வி = "இருமுனை இணைவு" தான் சாதியின் நிறுவனமயமாக்கலுக்கு (Institutionalization) வழிவகுத்தது என்று வரலாற்றாசிரியர்கள் கருதுகின்றனர். இங்கே, இருமுனை இணைவு என்றால் என்ன?

16.பதில் = "தூய்மை x மாசு" என்ற இருமுனை சமூகத்தில் இணையும் போது தான் சாதி நிறுவனமயமாக்கல் நிகழ்ந்ததாக வரலாற்றாசிரியர்கள் கருதுகின்றனர். அதாவது, தங்கள் அதிகாரத்தை நிலைநாட்ட ஆதிக்க சாதிகள் உருவாக்கிய "சுத்தம் x அசுத்தம்" என்ற தந்திரம் தான் சாதியை கட்டமைக்கிறது.

17.கேள்வி = இரண்டாம் உலகப் போரில் திருப்புமுனையாக அமைந்தவை எது?

17.பதில் ⏬

*ஜப்பான் அமெரிக்காவை தாக்கியது (Pearl Harbour Attack)
*அமெரிக்கா ஜப்பானை தாக்கியது (Hiroshima-Nagasaki)
*நார்மாண்டி படையிறக்கம் (Normandy Landing)
*பர்பரோசா நடவடிக்கை (Operation Barbarossa)
*ஸ்டாலின்கிராட் போர் (Battle of Stalingrad)
*அலன் டூரிங் கண்டுபிடிப்பு (Enigma Machine)

18.கேள்வி = 1976 நெருக்கடி நிலையின் போது இயற்றப்பட்ட 42 வது சட்டத்திருத்தம் எதைக் குறிக்கிறது?

18.பதில் ⏬ 

*நீதிமன்றங்களின் அதிகாரத்தை குறைக்கப்பட்டது.
*குடிமக்களுக்கான அடிப்படைக் கடமைகளை வகுக்கப்பட்டது.
*Socialism, Secular மற்றும் Intergrity ஆகிய சொற்கள் சேர்க்கப்பட்டது.
*கல்வி, வனம், எடை மற்றும் அளவு, விலங்கு மற்றும் பறவை பாதுகாப்பு, நீதி நிர்வாகம் ஆகியவை மாநிலப் பட்டியலில் இருந்து ஒருங்கியல் பட்டியலுக்கு மாற்றப்பட்டது.


19.கேள்வி = அதிகாரப்பூர்வமற்ற இந்திய மூவர்ணக்கொடி எங்கு, எப்போது, எதனால் முதல் முறையாக ஏற்றப்பட்டது?

19.பதில் ⏬

எங்கு = கொல்கத்தா
எப்போது = 07 ஆகஸ்ட் 1906
எதனால் = சுதந்திர கோரிக்கை

"செம்மஞ்சள், மஞ்சள், பச்சை" நிறத்தில் வடிவமைக்கப்பட்ட கொல்கத்தா கொடி வடிவமைக்கப்பட்டது. கொடியின் நடுவில் "வந்தே மாதரம்" என்று எழுதப்பட்டது. சசீந்திர பிரசாத் போஸ் (Sachindra Prasad Bose) மற்றும் ஹேமச்சந்திர கனுங்கோ (Hemchandra Kanungo) வடிவமைத்த கொல்கத்தா கொடி (Calcutta Flag) இந்தியாவின் முதல் அதிகாரப்பூர்வமற்ற கொடி (Unofficial Flag) என்று அறியப்படுகிறது.


20.கேள்வி = இந்தியாவின் முதல் போலீஸ் என்கவுண்டர் சம்பவம் எது?

20.பதில் = போலீசாரால் சுட்டு கொல்லப்பட்ட மன்யா சர்வேயின் மரணம் தான் பதிவு செய்யப்பட்ட முதல் போலீஸ் என்கவுன்டர் என்று அறியப்படுகிறது.


21.கேள்வி = சர்வாதிகார ஆட்சியாளர்களுக்கு உளவியல் ரீதியாக உள்ள "பயம்" என்ன?

21.பதில் = தூக்கம். 

22.கேள்வி = முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி படுகொலை பற்றி துப்பு துலக்க விசாரணை குழுவுக்கு முதலில் கிடைத்த முக்கியமான தடயம் என்ன?

22.பதில் = ஹரி பாபு என்பவர் Chinon CX கேமராவில் எடுத்த 10 புகைப்படங்கள்


23.கேள்வி = சுதந்திர இந்தியாவில் 1947 முதல் இன்று வரையிலான காலகட்டத்தில் தூக்கிலிடப்பட்ட ஒரே பெண் குற்றவாளி யார்?

23.பதில் = 3 சிறுமிகளை கொன்றதற்காக 03-01-1955 அன்று ரத்தன் பாய் ஜெயின் (Rattan Bai Jain) தூக்கிலிடப்பட்டார்.


24.கேள்வி = தமிழ்நாட்டில் கடைசியாக தூக்கிலிடப்பட்ட குற்றவாளி யார்?

24.பதில் =  27-04-1995 அன்று ஆட்டோ சங்கர் தூக்கிலிடப்பட்டார்.

25.கேள்வி = பழங்காலத்தில் தமிழ்நாட்டின் முதல் வணிக வளாகம் எது?

25.பதில் = மதுரையில் மீனாட்சி அம்மன் கோவிலுக்கு அருகே அமைந்துள்ள "புது மண்டபம்" தான் தமிழ்நாட்டின் முதல் வணிக வளாகம். 1600 களில் வசந்த விழாவை நடத்த திருமலை நாயக்கர் கட்டிய புது மண்டபம், ஆங்கிலேய நுழைவுக்கு பிறகு 1800 நடுப்பகுதியில் இருந்து வணிக வளாகமாக செயல்பட்டு வந்தது. இன்று "சீர்மிகு நகரங்கள்" திட்டத்தின் கீழ் புது மண்டபம் கடைகள் காலி செய்யப்பட்டு பாரம்பரிய சின்னமாக பாதுக்காக்கப்படுகிறது.

26.கேள்வி = இந்திய கிரிக்கெட் அணி சார்பில் ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் முதல் சதம் அடித்த வீரர் யார்?

26.பதில் = கபில் தேவ் 


27.கேள்வி = நேருவின் அரசியல் உலகில் பின்னடைவாக பார்க்கப்படுவது எது?

27.பதில் = 1962 இல் சீனாவின் தீடீர் தாக்குதலால் இந்தியா தனது அக்சாய் சின் நிலப்பகுதியை சீனாவிடம் பறிகொடுத்தது.

28.கேள்வி = நவீன எண்ணெய் கிணறு எங்கு கண்டுபிடிக்கப்பட்டது?

28.பதில் = 27-08-1859 அன்று அமெரிக்க நாட்டில் பென்சில்வேனியா மாகாணத்தில் டைட்டஸ்வில்லே பகுதியில் எட்வின் டிரேக் என்பவர் 69.5 அடி துளையிட்டு எண்ணெய்யை கண்டறிந்தார். பல்வேறு முரண்கள் இருப்பினும், Drake Well எனப்படும் இதுவே உலகின் முதல் எண்ணெய் கிணறு அதிகளவில் ஏற்கப்பட்டு இருக்கிறது.


29.கேள்வி = தமிழ் சினிமாவில் பாடல்களுக்கு இடையில் வசனம் இடம்பெற்ற முதல் பாடல் எது?

29.பதில் ⏬

திரைப்படம் = கைதி
வெளிவந்த ஆண்டு = 1951
பாடல் = Be Happy Be Jolly 
பாடலாசிரியர் = கே.டி.சந்தானம்
இயக்கம் = வீணை பாலச்சந்தர்

30.கேள்வி = வியட்நாம் போர் நிற்பதற்கு திருப்புமுனையாக அமைந்த புகைப்படம் எது?

30.பதில் = பான் தி கிம் ஃபூக் என்ற பெண் குழந்தை அலறியபடி ஓடி வரும் புகைப்படம்.


31.கேள்வி = நவீன உலகில் அறியப்பட்ட முதல் தார் ரோடு எது?

31.பதில் = 1824 இல் பாரிஸ் நகரில் உள்ள சாம்ப்ஸ்-எலிசீஸ் (Champs-Elysees) சாலையில் போடப்பட்ட தார் ரோடு தான் நவீன உலகில் அறியப்பட்ட முதல் தார் ரோடு ஆகும். 


32.கேள்வி = கம்பியில்லா தந்தி (Wireless Telegraphy) உதவியுடன் பிடிபட்ட முதல் குற்றவாளி யார்?  

32.பதில் = மருத்துவர் ஹவ்லி ஹார்வி கிரிப்பன் (Dr.Hawley Harvey Crippen)


33.கேள்வி = விண்வெளிக்கு முதலில் பயணம் மேற்கொண்டது யார்?

33.பதில் = விண்வெளிக்கு பயணம் மேற்கொண்ட முதல் விலங்கு Laika என்ற நாய் மற்றும் முதல் மனிதர் யூரி கேகரின்.


34.கேள்வி = அயோத்திதாசரும் இரட்டைமலை சீனிவாசனும் எதில் கருத்து முரண் கொண்டனர்?

34.பதில் = அயோத்திதாசர் "தமிழன், திராவிடன்" என்ற சொல்லையும், இரட்டைமலை சீனிவாசன் "பறையன்" என்ற சொல்லையும் பயன்படுத்தியதில் கருத்து முரண் கொண்டனர்.


35.கேள்வி = பூமியைத் தாண்டி கண்டுபிடிக்கப்பட்ட முதல் தனிமம் எது?

35.பதில் = ஹீலியம் (Helium)

18.08.1868 அன்று ஆந்திர பிரதேசம் குண்டூரில் பிரெஞ்சு விஞ்ஞானி ஜூல்ஸ் ஜான்சன் என்பவர் சூரிய கிரகணம் ஆராய்ச்சியின் போது ஒரு தனிமத்தை கண்டுபிடித்தார். 20.10.1868 அன்று அந்த தனிமத்திற்கு ஹீலியம் (Helios = Sun in Greek) என பெயரிட்டவர் நார்மன் லாக்கர்.


36.கேள்வி = கண்ணதாசன் அவர்கள் தான் எழுதிய பற்பல பாடல்களில் தனக்கு மிகவும் பிடித்த பாடல்களாக எதை சொன்னார்?

36.பதில் = சம்சாரம் என்பது வீணை பாடல் (SPB, மயங்குகிறாள் ஒரு மாது, 1975) மற்றும் என்னடா பொல்லாத வாழ்க்கை பாடல் (SPB, தப்புத் தாளங்கள், 1978)

37.கேள்வி = இந்தியாவில் மிகவும் சர்ச்சைக்குரிய பகுதி மற்றும் உலகளவில் மிகவும் சர்ச்சைக்குரிய பகுதிகள் எவை?

37.பதில் = இந்தியாவில் காஷ்மீர், உலகளவில் தைவான் மற்றும் இஸ்ரேல் - பாலஸ்தீன் பகுதிகள்.

38.கேள்வி = இதுவரை உலகில் எழுதப்பட்ட மிகப் பழமையான கதை எது?

38.பதில் = 4000 ஆண்டுகளுக்கு முன்பு அக்காடியன் மொழியில் இயற்றப்பட்ட "கில்காமேஷ்" உலகில் எழுதப்பட்ட மிகப் பழமையான கதையாகக் கருதப்படுகிறது. சுமேரியா நாட்டில் உருக் (தெற்கு ஈராக்) தேசத்தை ஆட்சி செய்த மன்னன் கில்காமேஷ் மற்றும் அவரது காலத்தில் நடந்த வெள்ளப்பெருக்கை பற்றி பேசும் கதையே கில்காமேஷ் ஆகும்.

39.கேள்வி =  பழங்காலத்திலும் நவீன காலத்திலும்  இடவியல் வரைபடம் (Topography Map) வடித்த நாடுகள் எவை?

39.பதில் = பழங்காலத்தில் மெசொப்பொதாமியா மற்றும் நவீன காலத்தில் பிரான்ஸ்.

40.கேள்வி = 20 ஆம் நூற்றாண்டில் பதிவு செய்யப்பட்ட முதல் இனப்படுகொலை எது?

40.பதில் = ஆர்மேனியன் இனப்படுகொலை (Armenian Genocide)

41.கேள்வி = 20 ஆம் நூற்றாண்டில் தமிழ்நாட்டில் நடைபெற்ற முதல் மாபெரும் போராட்டம் எது?

41.பதில் = 1921 இல் தொழிலாளர்கள் நடத்திய "பக்கிங்காம் மற்றும் கர்னாட்டிக் (B & C) ஆலை போராட்டம்" தான் தமிழ்நாட்டில் முதல் மாபெரும் போராட்டம் ஆகும்.

42.கேள்வி =  மரணத்திற்குப் பின் மன்னிக்கப்பட்டு, பின்னர் நாணயத்தாளின் முகமாக மாறிய புகழ்பெற்ற கணினி விஞ்ஞானி யார்?

42.பதில் = அலன் டூரிங் (Alan Turing)


43.கேள்வி = தமிழ்நாட்டில் லோக் சபா எம்.பியாக (Lok Sabha MP), ராஜ்ய சபா எம்.பியாக (Rajya Sabha MP), சட்டமன்ற உறுப்பினராக (MLA), சட்ட மேலவை உறுப்பினராக (MLC) பணியாற்றிய ஒரே அரசியல்வாதி யார்?

43.பதில் = எல்.கணேசன்  [Lok Sabha MP  = 2004 / Rajya Sabha MP = 1980 / MLA = 1967, 1971,1989 / MLC = 1986]

44.கேள்வி = அவசர கால மருத்துவ தொலைபேசி எண் "108" உருவாக மூலகர்த்தா யார்?

44.பதில் = மருத்துவர் A.P.ரங்கா ராவ், சத்யம் நிறுவனர் ராமலிங்க ராஜு, ஆந்திர முதல்வர் ராஜசேகர ரெட்டி.


45.கேள்வி = இந்திய சுதந்திர போராட்டத்தில் காந்தியின் நுழைவுக்கு காரணமாக அமைந்த ரெளலட் சட்டத்தின்  வரைவை எழுதியது யார்?

45.பதில் = சி.வி.குமாரசாமி சாஸ்திரி.  

46.கேள்வி = சமூக வலைத்தளங்களில் பயன்படுத்தப்படும் ஹேஸ்டேக்கை (Hashtag) கண்டுபிடித்தவர் யார்?

46.பதில் = கிறிஸ் மெசினா (Chris Messina)


47.கேள்வி = சாக்லேட் (Chocolate) செய்ய தேவைப்படும் மூலப்பொருளான கொக்கோ பவுடர் (Cocoa Powder) மற்றும் வைர நகை செய்ய தேவைப்படும் வைரங்கள் எந்த கண்டத்தில் அதிகமாக இருக்கிறது?

47.பதில் = கொக்கோ பவுடர் / வைரங்கள் ஆப்பிரிக்கா கண்டத்தில் அதிகமாக இருக்கிறது. குறிப்பிடத்தகுந்த அளவு எண்ணெய், நிலக்கரி, தங்கம் கூட இருக்கிறது. ஆனால் ஆப்பிரிக்கா ஏழை நாடு, காரணம் அரசியல்.

48.கேள்வி = பெட்ரோலியம் என்றால் என்ன?

48.பதில் = லத்தீன் மொழியில் பெட்ரோலியம் என்றால் "பாறைக்குள் இருக்கும் எண்ணெய்" (பெட்ரா = பாறை / ஓலியம் = எண்ணெய்) எனப்படும். பண்டைய நுண்ணுயிரிகள் பெரும்பாலும் கடலோர மணல், வண்டல் மற்றும் பாறை அடுக்குகளின் கீழ் புதையுண்ட போது, ​​​​இந்த அடுக்குகளின் அழுத்தம் மற்றும் வெப்பம் மில்லியன் கணக்கான ஆண்டுகளில் நுண்ணுயிரிகளின் எச்சங்களை பெட்ரோலியமாக மாற்றுகிறது.

49.கேள்வி = எந்த வடிவமைப்பு, கருவிகளை வடிவமைக்க ஆதிகால மனிதனை தூண்டியது?

49.பதில் = பற்கள்

50.கேள்வி = மண்ணில், விண்ணில், கடலில் புதிய தகவல்களை (Big Data) திரட்ட மனிதன் தடம் பதித்த ஆராய்ச்சிகள் குறித்து சொல்லுங்கள்.

50.பதில் ⏬

*மண் - Soil = Justus Von Liebig = 1830s = Study of Plant Nutrients
*விண் - Space = Sputnik 1 = 1957 = First Artificial Satellite = Study of Space
*கடல் - Sea = HMS Challenger = 1872 to 1876 = Study of Deep Sea Creatures

51.கேள்வி = உலகமயமாக்கலின் முக்கிய கருவிகள்

51.பதில் ⏬

*Power - அதிகாரம் (Super Power)
*Money - பணம் (Dollars Currency)
*Logistics - தளவாடங்கள் (Ship, Train, Bus, Truck, Plane)
*Production - உற்பத்தி பெருக்கல் (Multiplication)

52.கேள்வி = கருந்துளை (Black Hole) பெயர் காரணம் என்ன?

52.பதில் = சிறைக்குள் நுழைந்தால் உயிருடன் தப்பிக்க முடியாது என்று கருதப்பட்ட, கருந்துளை சிறை என்று அழைக்கப்பட்ட, கல்கத்தா சிறைச்சாலையை குறிக்கும் வகையில் ராபர்ட் டிக் (Robert Dicke) கருந்துளை என்ற சொல்லை உருவாக்கினார்.


53.கேள்வி = தமிழ்நாட்டில் முதல் சுயமரியாதை திருமணம் என அறியப்படுவது எது?

53.பதில் = 1928 இல் அருப்புக்கோட்டை அருகே சுக்கிலநத்தம் சிற்றூரில் சண்முகம் மற்றும் கைம்பெண் மஞ்சுளா ஆகியோருக்கு தந்தை பெரியார் சுயமரியாதை திருமணத்தை நடத்தி வைத்தார்.


54.கேள்வி = ஏன் 2 டிசம்பர் கியூபாவின் முக்கியமான நாள்?

54.பதில் ⏬

*2 டிசம்பர் 1956 = கியூபாவின் சர்வாதிகாரி ஃபுல்கென்சியோ பாடிஸ்டாவின் ஆட்சியைக் கவிழ்க்க ஃபிடல் காஸ்ட்ரோவின் முதல் முயற்சி தோல்வியில் முடிந்தது. 
*2 டிசம்பர் 1961 = கியூபா பொதுவுடைமை நாடாகும் என்று பிரதமர் பிடல் காஸ்ட்ரோ அறிவித்தார்.
*2 டிசம்பர் 1976 = 1959 முதல் 1976 வரை 17 வருடங்கள் பிரதமராக பணியாற்றிய பிடல் காஸ்ட்ரோ கியூபாவின் ஜனாதிபதி ஆனார்.

55.கேள்வி = "மன்றோ கொள்கை" என்றால் என்ன?

55.பதில் = 2 டிசம்பர் 1823 அன்று "மன்றோ கொள்கை" ஒப்பந்தத்தை அமெரிக்க அதிபர் ஜேம்ஸ் மன்றோ அறிமுகம் செய்தார். 6 டிசம்பர் 1905 அன்று “மன்றோ கொள்கை” உடன் “ரூஸ்வெல்ட் இணை” (Roosevelt Corollary) என்றொரு கொள்கையை அமெரிக்கா அதிபர் தியோடர் ரூஸ்வெல்ட் இணைத்தார். ஐரோப்பிய விவகாரங்களில் அமெரிக்கா தலையிடாது, அமெரிக்க விவகாரங்களில் ஐரோப்பா தலையிடக்கூடாது, இனிமேல் மேற்கு அரைக்கோளம் (Western Hemisphere) காலனித்துவத்தை ஏற்காது, மேற்கு அரைக்கோளம் பகுதிகளை பாதுகாப்பது அமெரிக்காவின் பொறுப்பு என்பது “மன்றோ கொள்கை மற்றும் ரூஸ்வெல்ட் இணை” கொள்கைகளின் சுருக்கமான சாராம்சம் ஆகும். இதுவே, லத்தீன் அமெரிக்க நாடுகளின் உள் விவகாரங்களில் அமெரிக்கா தலையிட உதவியது.

56.கேள்வி = 7 டிசம்பர் இரண்டாம் உலகப்போரை மாற்றி அமைத்த நாள். அதென்ன?

56.பதில் = 7 டிசம்பர் 1941 அன்று அமெரிக்காவின் ஹவாய்த் தீவில் அமைந்துள்ள பேர்ள் துறைமுகம் மீது ஜப்பானியக் கப்பற்படைத் தாக்குதல் நடத்தியதில் சுமார் 2000 அமெரிக்கர்கள் கொல்லப்பட்டனர். இதையெடுத்து, இரண்டாம் உலகப்போரில் நேரடியாக களம் இறங்க அமெரிக்கா ஆயத்தமானது. பேர்ள் துறைமுகத் தாக்குதலுக்கு ஜப்பானைத் பழிவாங்க காத்திருந்த அமெரிக்கா 1945 இல் ஜப்பானின் ஹிரோஷிமா - நாகசாகி பகுதியில் அணுகுண்டை வீசி லட்சக்கணக்கான மக்களை கொன்றொழித்தது. இதைத் தொடர்ந்து, சில நாட்களில் முடிவுற்ற இரண்டாம் உலகப்போருக்கு பிறகு இரண்டாம் உலகப்போரில் வென்றாலும் பிரிட்டன் பொருளாதாரத்தில் நலிவுற்ற நிலைக்கு செல்ல காலனி நாடுகள் ஒவ்வொன்றும் விடுதலை பெற்றது, அமெரிக்காவும் Super Power ஆக உயர்ந்தது.


57.கேள்வி = ஜெய் ஹிந்த் என்ற சொல்லை நிறுவியவர் யார்?

57.பதில் = செண்பகராமன்


58.கேள்வி = ஆதிகால வேட்டையாடி மனிதர்களின் மனதில் முதலில் தோன்றியது பேய் நம்பிக்கையா அல்லது இறை நம்பிக்கையா?

58.பதில் = "இயற்கை" மீதான "பேய் பயம்" தான் "இறை நம்பிக்கை" உருவாக காரணம்.

59.கேள்வி = 28 டிசம்பர் இந்தியாவில் இரு பெரும் புள்ளிகளின் பிறந்தநாள். ஒருவர் இல்லை, ஒருவர் இருக்கிறார். சரியோ தவறோ ஆனால் இந்த இருவரால் பலர் வாழ்கிறார்கள்.

59.பதில் ⏬

திருபாய் அம்பானி = 28 டிசம்பர் 1932 - 6 ஜூலை 2002 

ரத்தன் டாடா = 28 டிசம்பர் 1937

60.கேள்வி = "ஆலய நுழைவு பிரவேசம்" நடந்த 1939 இல் வைத்தியநாதர் தலைமையில் மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்குள் சென்ற முதல் ஆறு தாழ்த்தப்பட்ட மக்கள் யார்?

60.பதில் ⏬

*முத்து
*விருதுநகர் சண்முகம் 
*மதிச்சியம் சின்னையா
*விராட்டிபத்து பூவலிங்கம்
*ஆலம்பட்டி முருகானந்தம்
*கக்கன் (முன்னாள் காங்கிரஸ் அமைச்சர்)

61.கேள்வி = உலகின் முதல் சட்ட வல்லுநர் யார்?

61.பதில் = உலகின் முதல் சட்ட வல்லுநர் பாபிலோனிய பேரரசர் ஹம்முராபி ஆவார். அவரது வழிகாட்டலில் "Code of Hammurabi" சட்டம் உருவானது.


62.கேள்வி = உலகில் அதிக போர்களை கண்ட வீரன் யார் ?

62.பதில் = சைமன் பொலிவார்

நாடுகளை கைப்பற்றுவதற்கு போர் தொடுத்த மாவீரர்கள் அலெக்சாண்டர் மற்றும் நெப்போலியன். ஆனால், லத்தீன் அமெரிக்க நாடுகள் விடுதலை அடைவதற்கு போர் தொடுத்த மாவீரர் சைமன் பொலிவார். சைமன் பொலிவாரால் விடுதலை பெற்ற ஒரு நாடு அன்னாரை நினைவு கூறும் விதமாக தங்கள் நாட்டுக்கு Bolivia என்று பெயரிட்டனர். சைமன் பொலிவருக்கு மரியாதை செய்யும் விதமாக 24 ஜூலை 1983 அன்று இந்திய ஒன்றிய அரசு தபால் தலை வெளியிட்டது. தற்போதைய சூழலில் மாறுபட்ட அரசியல் கருத்துக்கள் நிலவினாலும் அதிக போர்களை சந்தித்தவர் என்ற "பிம்பம்" சைமன் பொலிவாருக்கு தான் உள்ளது.

63.கேள்வி1997 இல் முதல் கேமரா போனில் புகைப்படம் எப்படி எடுக்கப்பட்டு இணையத்தில் பகிரப்பட்டது?

63.பதில் =  1997 இல் "கேமரா செல்போன்கள்" இல்லாத நிலையில், தொழிலதிபர் பிலிப் கான் தனது டிஜிட்டல் கேமரா மற்றும் மோட்டோரோலா செல்போனை இணைத்து கலிபோர்னியாவின் சாண்டா குரூஸில் உள்ள ஒரு மகப்பேறு மருத்துவமனையில் பிறந்த தனது மகளின் புகைப்படத்தை எடுத்து, ஆன்லைனில் பகிர்ந்து கொண்டார்.


64.கேள்வி = புகையிலை வரலாறின் சுருக்கம் என்ன?

64.பதில் ⏬

8000 ஆண்டுகளுக்கு முன்பு பூர்வீக அமெரிக்கர்களால் பயிரிடப்பட்ட புகையிலை, 15 ஆம் நூற்றாண்டில் கிறிஸ்டோபர் கொலம்பஸ் மூலம் ஐரோப்பாவிற்கு வந்தது, மெல்ல 16 ஆம் நூற்றாண்டில் மத்திய அமெரிக்காவிற்கு வந்தது, 17 ஆம் நூற்றாண்டில் ஆப்பிரிக்கா மற்றும் ஆசியா உட்பட உலகின் பல்வேறு பகுதிகளில் புகையிலை பயிரிடப்பட்டு உலகளாவிய புகையிலை வர்த்தகத்தை நிறுவுவதற்கு பங்களித்தது.

65.கேள்வி = அறிவியல் உலகில் எந்த துகள் “பச்சோந்தி”என்று அழைக்கப்படுகிறது?

65.பதில் = துகள் இயற்பியலின் நிலையான மாதிரியின்படி (Standard Model of Particle Physics) மூன்று வகையான நியூட்ரினோ உள்ளன. அவை,

*எலக்ட்ரான் நியூட்ரினோ (Electron Neutrino)
*மியூவான் நியூட்ரினோ (Muon Neutrino)
*டாவ் நியூட்ரினோ (Tau Neutrino)

பிரபஞ்சத்தில் ஒலியின் வேகத்தில் செல்லும் போது நியூட்ரினோக்கள் தனது நிலையை "பச்சோந்தி" (Chameleon) போல மாற்றிக் கொள்கிறது என்று நிறுவிய ஜப்பான் விஞ்ஞானி தகாகி கஜிதா மற்றும் கனடா விஞ்ஞானி ஆர்த்தர் மெக்டொனால்டு ஆகிய இருவருக்கும் இயற்பியலுக்கான நோபல் பரிசு 2015 இல் வழங்கப்பட்டது.


66.கேள்வி = பொதுக்கருத்து வில்லனாக சித்தரித்தாலும், முதலாம் உலகப் போர் வெடிப்பதற்கு முன் முடிந்த வரை அமைதியைக் காக்க விரும்பியவர்களில் முக்கியமானவர், இரண்டாம் உலகப் போரின் போது இறந்தார். அவர் யார்?

66.பதில் = கடைசி ஜெர்மன் பேரரசர் இரண்டாம் கைசர் வில்லியம் (Kaiser Wilhelm II) தன்னால் இயன்றவரை அமைதி காக்க முயற்சித்தார் ஆனால் களச் சூழல் அவரை போரில் ஈடுபடத் தூண்டியது.



67.கேள்வி = கின்னஸ் உலக சாதனை நகரம் என்று அழைக்கப்படும் நகரம் எது?

67.பதில் = துபாய்

68.கேள்வி = Joseph Stalin - Engelsina Markizova புகைப்படத்தின் வரலாற்று பின்னணி என்ன?

68.பதில் = 1936 இல் Joseph Stalin, மலர்க்கொத்துடன் Engelsina Markizova என்கிற சிறுமியுடன் எடுத்துக் கொண்ட புகைப்படம் மக்கள் மத்தியில் அவரை ஒரு கவர்ச்சியான தலைவராக சித்தரித்தது. எதிர்பாராதவிதமாக, 1938 இல் சிறுமியின் பெற்றோர் "ஜப்பானிய உளவாளிகள் மற்றும் ட்ரொட்ஸ்கி ஆதரவாளர்கள்" என்று முத்திரை குத்தப்பட்டு Great Purge (1936-1938) காலகட்டத்தின் போது ரஷ்யா அரசால் கொல்லப்பட்டனர்.


69.கேள்வி = Super Power என்ற சொல்லை உருவாக்கியவர் யார்?

69.பதில் = 1944 இல் "The Superpowers: The United States, Britain and the Soviet Union - Their Responsibility for Peace" என்ற நூலில் Super Power என்ற சொல்லை பேராசிரியர் வில்லியம் டி.ஆர்.பாக்ஸ் நிறுவினார்.


70.கேள்வி = "ஹரிஜன்" என்ற வார்த்தையை உருவாக்கியவர் யார்?

70.பதில் = வட இந்தியா பக்தி இயக்கத்தை சேர்ந்த நரசிங்க மேத்தா. 

71.கேள்வி = இந்தியாவில் தனி நபர் கடன் திட்டத்தை அறிமுகப்படுத்திய முதல் வங்கி எது?

71.பதில் = இந்தியன் ஓவர்சீஸ் வங்கி (Indian Overseas Bank - IOB).


72.கேள்வி அமெரிக்கா, சீனா மற்றும் இந்தியா எந்த ஆண்டில் 1 லட்சம் கோடி மொத்த உள்நாட்டு உற்பத்தியை (GDP) எட்டியது? 

72.பதில் ⏬

*1970 - அமெரிக்க  
*1998 - சீனா 
*2007 - இந்தியா

73.கேள்வி = இரண்டாம் உலகப் போரில் அச்சு நாடுகளுக்கும் (Big 3 = Germany, Italy, Japan) நேச நாடுகளுக்கும் (Big 3 = USA, USSR, UK) இடையே கடும் சண்டை நடந்தது. அந்த நாடுகள் ஏன் அச்சு நாடுகள் என்று அழைக்கப்பட்டன?

73.பதில் = 1930 களில் ஹங்கேரியின் பிரதமர் கோம்போஸ் ஐரோப்பிய சக்தியின் அச்சு ரோமில் இருந்து பெர்லின் வரை நீடிக்க வேண்டும் என்று விரும்பினார். கோம்போஸ் கூறிய “அச்சு” என்ற சொல்லின் அடிப்படையில், 1936 இல் ஜெர்மனியும் இத்தாலியும் “ரோம்-பெர்லின் அச்சு” என்கிற ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன. பின்னர், இத்தாலிய சர்வாதிகாரி முசோலினி பெர்லின்-ரோம் ஒப்பந்தம், ஒரு தடையாக இல்லாமல், அமைதியை விரும்பும் ஐரோப்பிய நாடுகளுக்கு ஒரு கூட்டு அச்சாக செயல்படும் என்றார். 1936 இல் முசோலினியின் அச்சுக் கருத்தை முன்னிலைப்படுத்தி நியூயார்க் டைம்ஸ் பத்திரிகையில் செய்தி வெளிவந்தது. 1940 இல் அமெரிக்க அதிபர் ரூஸ்வெல்ட் முதன்முதலில் "அச்சு" என்ற சொல்லை பயன்படுத்த தொடங்கினார். இதுவே இரண்டாம் உலகப் போரில் (1939-1945) ஜெர்மனி, இத்தாலி மற்றும் அதன் கூட்டணி நாடுகள் "அச்சு நாடுகள்" என்று அழைக்கப்படலாயிற்று.


74.கேள்வி = நடிகர் மற்றும் அரசியல்வாதி எம்.ஜி.ஆர் முரண் பற்றி சொல்லவும். 

74.பதில்  ⏬

*நம் நாடு (1969) திரைப்படத்தில் அரசியல் தலைவர் வேடத்தில் நடித்தார் (அண்ணா மறைந்த பிறகு நடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது).
*திரையில் "ஏழை" குழந்தைகளுக்கு கல்வி வேண்டும் என்பார் (ஆட்சியில் Management Quota மூலம் கல்வியை வணிகத் தொழில் ஆக்கினார்).
*திரையில் கொலைக்காரனாக நடித்ததில்லை (ஆட்சியில் போராளிகளை சுட்டு கொன்றார்).
*திரையில் பண்ணையார்களை எதிர்த்தார் (ஆட்சியில் பண்ணையாளர்களை வாழ வைத்தார்).
*திரையில் பக்திமான் வேடத்தில் நடித்ததில்லை (ஆட்சியில் பக்திமானாக வாழ்ந்தார்).
*திரையில் குடிக்காரனாக நடித்ததில்லை (ஆட்சியில் டாஸ்மாக்கை நிறுவினார்).

75.கேள்வி = 2008 இல் மரபியலாளர்களால் (Geneticists) அடையாளம் காணப்பட்ட முதல் இந்தியரின் பெயர் என்ன?

75.பதில் = விருமாண்டி

மரபியல் நிபுணர் ஸ்பென்சர் வெல்ஸ் முன்னெடுப்பில் ஆக்ஸ்போர்டு ஆராய்ச்சி கழகம் மற்றும் மதுரை காமராஜ் பல்கலைக்கழகம், இந்தியாவில் உள்ள பல மனிதர்களிடம் டி.என்.ஏ மாதிரிகளை சேகரித்து, ஆராய்ச்சி மூலம் ஒரே மாதிரியான மரபணுக்களை பகிர்ந்து கொள்ளும் மனிதனை அடையாளம் காண்பதில் கவனம் செலுத்தியது. அதன் அடிப்படையில், 2008 இல் பேராசிரியர் ராமசாமி பிச்சப்பன் மற்றும் ஆராய்ச்சி குழுவினர் விருமாண்டி என்ற மனிதனின் டி.என்.ஏவை பரிசோதித்து, எம் 130 என்ற மரபணுவை கண்டுபிடித்தனர். விருமாண்டி என்பவரின் மரபணு குறிப்பானது 70,000 ஆண்டுகளுக்கு முன்பு இந்தியாவில் நிகழ்ந்த முதல் மனித குடியேற்றத்தின் அடையாளமாகும். ஆப்பிரிக்க மனிதர்களின் மரபணுக்களோடு ஒத்துப் போகிற M130 தான் இந்தியாவில் காணப்படும் பழமையான மரபணு குறிப்பான்.


வாசித்தமைக்கு நன்றி.

வணக்கம்.

பெரியார் குறித்து அவதூறு பரப்பும் சீமான்

பெரியார் குறித்து அவதூறு பரப்பும் சீமான் பொருளடக்கம் முகவுரை ஏன் பெரியார் மட்டும்  அதிகமாக எதிர்க்கப்படுகிறார்? பெரியாருக்கு பின்னால் திரண்ட...